குணசேகரனை எதிர்க்கும் நந்தினி.. ஆடிப்போன மொத்த குடும்பம் – எதிர்நீச்சல் சீரியல்!!
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு தெரியாமல் குடும்பத்து பெண்கள் அனைவரும் தங்களுக்கான தொழிலை தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இது தெரிந்து குணசேகரன் ருத்ர தாண்டவம் ஆட இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்:
வீட்டில் இருக்கும் பெண்களை மட்டம் தட்டியே காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கும் குணசேகரனை மீறியும் எதையாவது சாதிக்க வேண்டும் என்று அனைவரும் முடிவு செய்து தங்களுக்கு தெரிந்த தொழிலை செய்ய தொடங்குகின்றனர். முதற்கட்டமாக நந்தினி சமையல் ஆர்டர் எடுத்து அதனை முடித்திருக்கிறார். ஆனால் இது தெரிந்து குணசேகரன் வீட்டில் அனைவரும் முன்னிலையிலும் நந்தினியை தாறுமாறாக திட்டி விடுகிறார்.
இந்த வாரம் அதிஷ்டத்தை அள்ளித்தர போகும் ராசிகள் – முழு விவரங்கள் இதோ!
இதே போல் தான் மற்ற பெண்களும் செய்கிறார்கள் என்று ஒட்டுமொத்தமாக சண்டை போடுகிறார். பொறுமையாக நின்றிருந்த நந்தினி இனிமேல் உங்கள் பேச்சுக்களை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்களுக்கு பிடித்ததை நாங்கள் செய்வோம் என்று குணசேகரனை எதிர்த்து தைரியமாக பேசுகிறார். இதைக் கேட்ட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் ஆடிப் போய் உள்ளனர்.