PF கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
PF கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PF கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PF கணக்கு வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

பிஎஃப் சந்தாதாரர்கள் அனைவரும் தனக்கு ஒரு நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்நிலையில் இந்த இ-நாமினேசன் நடைமுறையை உடனடியாக முடித்தாக வேண்டும் என்று பிஎஃப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

பிஎஃப் சந்தா:

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வருங்காலத்தில் உதவும் வகையில் அவர்களின் ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் சேமநல நிதி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. அவ்வப்போது ஈபிஎப்ஓ அமைப்பு பிஎப் முறையில் சில மாற்றங்களை அறிவித்து வருகிறது.

இன்று முதல் 3 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை – கோவில் நிர்வாகம்!

அதன்படி பிஎப் கணக்குடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. மேலும் முக்கிய அறிவிப்பாக தற்போது பிஎஃப் சந்தாதாரர்கள் தனக்கென்று ஒரு நாமினியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை எனில் வரும் காலத்தில் பிஎப் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. சம்பளம் பெறும் நபர் இறந்தால், வருங்கால வைப்பு நிதி பணம் அவரின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இதற்காக, சம்பளதாரர் குடும்பத்தில் ஒருவரை ஒரு நாமினியாக கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் ‘நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்’ உருவாக்கம் – முதல்வர் அறிவிப்பு!

தற்போது ஆன்லைன் மூலம் நாமினியை நியமனம் செய்ய முடியும். அதன் மூலம் பிஎஃப் சந்தாதாரர் மரணத்துக்கு பிறகு பிஎஃப் தொகை மற்றும் இதர சலுகைகள் அவர் தேர்வு செய்த அந்த நாமினிக்கு கிடைக்கும். பேமிலி பென்சன் தொகையும், காப்பீட்டுத் தொகையும் அவரது குடும்பத்துக்கு கிடைக்கும். தற்போது பிஎஃப் சந்தாதாரருக்கு 7 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. எனவே பிஎஃப் சந்தாதாரர் உடனடியாக பிஎஃப் இணையபக்கத்தில் உள்ள For Employees என்ற பிரிவில் இ-நாமினேசன் பிராசஸை முடிக்க வேண்டும் என்று பிஎஃப் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!