தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் – இன்று (ஜூன் 26) வெளியீடு!

0
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - இன்று (ஜூன் 26) வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் - இன்று (ஜூன் 26) வெளியீடு!
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் – இன்று (ஜூன் 26) வெளியீடு!

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 450க்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அதில் 2023-24 ஆம் கல்வியாண்டில் சுமார் 1.54 லட்சம் இளநிலை பட்டபடிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு மே 5 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகி இருக்கின்றன.

Follow our Instagram for more Latest Updates

அதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து இருக்கின்றனர். அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி கடந்த 20 ஆம் தேதி நடைபெற்றது. மேலும் மாணவர்களுக்கு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று (ஜூன் 26) வெளியாக இருக்கிறது. இந்த தரவரிசை பட்டியலை சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் அமைச்சர் பொன்முடி வெளியிட இருக்கிறார். அதில் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த 1,87,693 மாணவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து தகவல் இருக்கும்.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 உரிமைத் தொகை – முதல்வர் இன்று (ஜூன் 26) ஆலோசனை!

இது குறித்த அறிவிப்பை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தரவரிசை பட்டியலில் ஏதாவது புகார் இருந்தால் அதனை ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர்கள் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூலை 2 ஆம் தேதி தொடங்க இருக்கிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!