உலக கோப்பை 2023: பென் ஸ்டோக்ஸ் அதிரடி சதம்.. நெதர்லாந்துக்கு 340 ரன்கள் இலக்கு…!
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் 15 ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு வந்த பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலனுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதைத்தொடர்ந்து டேவிட் மாலன் 87 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் 51 ரன்கள் விளாசினார். இதற்கிடையில் பென் ஸ்டோக்ஸ் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 339 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பாஸ் டி லீடே 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.
128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி மேக்ஸ்வெல் சாதனை – ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!!
இரு அணிகளின் பிளேயிங் 11:
இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர் /கேப்டன்), மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, கஸ் அட்கின்சன், அடில் ரஷித்
நெதர்லாந்து : வெஸ்லி பாரேசி, மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மேன், சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ஸ்காட் எட்வர்ட்ஸ்(விக்கெட் கீப்பர் /கேப்டன் ), பாஸ் டி லீட், தேஜா நிடமானுரு, லோகன் வான் பீக், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் தட், பால் வான் மீகெரென்.