128 பந்துகளில் 201 ரன்கள் விளாசி மேக்ஸ்வெல் சாதனை – ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி!!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலகக்கோப்பை:
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 39 வது லீக் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணியினர் மோதிக்கொண்டனர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதனால் முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரின் முடிவுகள் 5 விக்கெட் இழப்பில் 291 ரன்களை பெற்றனர். சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியா அணியினருக்கு வெற்றி இலக்காக 292 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதன் பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியினர் 46.5 ஓவர்களிலேயே ஏழு விக்கெட் இழப்பில் 293 ரன்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது.
TET தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு சூப்பர் வாய்ப்பு – உடனே பாருங்கள்!
இதன் மூலமாக, ஆஸ்திரேலியா அணி ஆறாவது வெற்றியை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. குறிப்பாக மேக்ஸ்வெல் 201 ரன்கள் விளாசி அமர்களப்படுத்தினார். ஆனால், ஆப்கானிஸ்தான் அணி மீண்டும் ஒரு தோல்வியை பதிவு செய்து எட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இதற்குப் பிறகு வரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.