நாளை 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 150 முன்னணி நிறுவனங்கள்…உடனே முந்துங்கள்”..!!

2
???? 15,000 ?????? ??????????? ?????? ???????? ???????????? ??????...!! " 150 ??????? ???????????...???? ???????????"..!!
நாளை 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்...!! " 150 முன்னணி நிறுவனங்கள்...உடனே முந்துங்கள்"..!!
நாளை 15,000 காலிப் பணியிடங்களை நிரப்ப மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…!! ” 150 முன்னணி நிறுவனங்கள்…உடனே முந்துங்கள்”..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு உதவியுடன் அந்நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அந்த வகையில், தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறம் மேம்பாட்டு துறையானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையமானது செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (26.10.2024) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது. மேலும், வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை விரிவாக கீழே பார்க்கலாம்.

கல்வித்தகுதிகள்:

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8th/10th/12th/ITI/diploma/degree/nursing/pharmacy/engineering முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

நீங்க +2 படிச்சு இருக்கீங்களா.. உங்களுக்காவே RRB யில் அரசுவேலை கொட்டிகிடக்கு.. உடனே முந்துங்க இதுவே கடைசிநாள்…

வேலைவாய்ப்பு சிறப்பம்சங்கள்:

15,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் நாளை வேலைவாய்ப்பு முகாமை செங்கல்பட்டில் நடத்த உள்ளது. மேலும், இதில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல், இலவச திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முன்னணி நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் முதலியவை நாளை நடைபெறுகிறது. மேலும், தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ முதலியவற்றின் நகல் மற்றும் அசலுடன் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை அறிந்துகொள்ள http://www.tnprivatejobs.tn.gov.in என்ற லிங்கை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அம்மாவட்ட வாழ்வாதார திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளனர்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!