தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்களுடன்!

0
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் - முழு விவரங்களுடன்!
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – முழு விவரங்களுடன்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெற இருக்கிறது. மேலும், வேலை வாய்ப்பு முகாம் தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் இஎம்ஆர்ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டுமே கோவை மாநகராட்சி, ஊரகப் பகுதிகளுக்கு உட்பட்ட 50 ஓட்டுனர்கள், 30 மருத்துவ உதவியாளர்களுக்கான காலி பணியிடம் இருக்கிறது. இந்நிலையில், 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற இருக்கிறது.

NABFINS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – உடனே அப்ளை பண்ணுங்க!

அதாவது, ஓட்டுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி, குறைந்தபட்சம் 162.5 செ.மீ உயரம், இலகுரக வாகன உரிமம் ஆகிய தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், 24 முதல் 35 வயதுக்குள் 3 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஆண், பெண் என இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழில்நுட்பத் தேர்வு, நேர்காணல், கண் பார்வை பரிசோதனை, மருத்துவத் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படும் எனவும், மாத சம்பளம் ரூ.15,235 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு, மருத்துவர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் நாளை நடைபெற இருக்கும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!