
X நிறுவனத்தை விற்ற எலான் மஸ்க்…!! தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்த பெரிய ஸ்கெட்ச் என தகவல்..!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகின் தலைசிறந்த சமூக ஊடக தளங்களில் ஒன்றாக வளம் வந்த Twitter ரை, பிரபல தொழிலதிபரும், Space X மற்றும் Tesla வின் உரிமையாளருமான எலான் மஸ்க் வாங்கினார். பின்னர் அதன் பெயரை X என்று மாற்றிய எலான் மஸ்க் உயர்மட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்து வலைத்தளத்தின் கட்டமைப்பில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இந்நிலையில் எலான் மஸ்க் தனது X நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மார்ச் 31 வரை கொளுத்தப்போகும் வெயில்…!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!
அதாவது, “சில வாரங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் X AI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பமான Grok 3 AI அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, தொழிலதிபர் எலான் மஸ்க் சமூக வலைத்தளமான X தளத்தை, தனது சொந்த நிறுவனமான x AI நிறுவனத்துக்கு 33 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ.2.82 லட்சம் கோடிக்கான பங்குகளை ஒப்பந்தம் மூலம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் x AI நிறுவனம் உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆய்வு நிறுவனமாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்”.























