இனி டெபிட் கார்டு இல்லாமலே இதை செய்யலாம்….முழு விவரங்களுடன்!
நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறுது கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஆன்லைனில் சைபர் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பாஸ்வேர்டுகளை அவ்வப்போது மாற்ற வேண்டும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் – எத்தனை புள்ளிகள் தெரியுமா?
டெபிட் கார்டு இல்லாமலே, ஆதார் எண்ணை பயன்படுத்தி, UPI PIN ஐ மாற்றலாம். UPI மொபைல் ஆப் ஒன்றில் PIN ஐ மாற்றும் ஆப்ஷனுக்குச் சென்று, ஆதார் அட்டை மூலம் PIN மாற்றம் செய்யும் முறையைத் தேர்வு செய்யவும்.உங்கள் ஆதார் எண்ணின் கடைசி 6 இலக்கங்களை அதற்குரிய இடத்தில் டைப் செய்து, ஆதார் OTP என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP கிடைக்கும். அதை டைப் செய்ததும், புதிய UPI PIN ஐ உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். இரண்டு முறை புதிய பின் நம்பரை சரியாக டைப் செய்து உறுதிப்படுத்தவும். உங்கள் UPI PIN மாற்றப்பட்ட செய்தி எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.


























