தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழக மாணவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்குவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கல்வி கடன்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கூடுதல் பதிவாளர்கள் மற்றும் இணைப்பதிவாளர்களுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அதில் உணவு மற்றும் நகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் கோபால், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், சிறப்பு பணி அலுவலர் சிவன் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சரசரவென விலை உயரும் காய்கறிகள் – மார்க்கெட் நிலவரம் இதோ!

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.14500 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டில் ரூ.16500 கோடி பயிர்க்கடன் வழங்க முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயம் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் மகளிர் சுய உதவிக் குழு கடன் கடந்த ஆண்டை விட தற்போது 2 மடங்காக உயர்த்தி வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்படுகிறது. இது நல்ல விஷயம் என்பதால், இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் தெரிவித்தார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!