
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் எதிரொலி.. CA தேர்வுகள் ஒத்திவைப்பு.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மே 7 ஆம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சார்ந்து 9 பகுதிகளில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் பாகிஸ்தான் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
AIIMS-ல் Project Research Scientist-I வேலை – ரூ.56,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இரு நாடுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் பட்டயக் கணக்காளர் (CA) பட்டபடிப்பிற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசிய ICAI நிறுவனத்தின் இணைச் செயலாளர் ஆனந்த் குமார் சதுர்வேதி “நாடு முழுவதும் இன்று (09-05-2025) தொடங்கி மே 14 ஆம் தேதி வரை நடத்தப்படவிருந்த CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் திருத்தப்பட்ட தேதி அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.

























