தமிழக இ-சேவை மைய வேலைவாய்ப்பு 2025 – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் (Tamil Nadu e-Governance Agency) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் e-District Manager பணிக்கென காலியாக உள்ள 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TNeGA காலிப்பணியிடங்கள்:
e-District Manager பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNeGA கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
TNeGA வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
AIIMS-ல் Project Research Scientist-I வேலை – ரூ.56,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!
TNeGA ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு TNeGA -ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
TNeGA தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























