இனி ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்.. தீவிர ஆராய்ச்சியில் DRDO.. வெளியான முக்கிய தகவல்..!!
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், நேற்று (09-05-2025) இரவு முதல் இந்தியாவின் எல்லையோர கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர்.
இந்நிலையில் “ராணுவ வீரர்களுக்கான ஆபத்தை குறைக்க ராணுவ பணிகளுக்கான மனித உருவ ரோபோக்களை புதிதாக உருவாக்கும் பணியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ISRO மற்றும் DRDO வசம் உள்ள நிகழ்நேர தரவுகளை வழங்கும் அதி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் விரைவாக எதிர்த்தாக்குதல் நடத்த முடியும் என்றும், இந்திய இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்” என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


























