
அம்பேத்கர் ஜெயந்தி பொது விடுமுறை நாளாக அறிவிப்பு…!! 134 வது பிறந்த நாளையொட்டி மத்திய அரசு அங்கீகாரம்
“இந்திய அரசியலமைப்பின் தந்தை” என போற்றப்படும் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர், 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். மேலும், அவருடைய பிறந்த நாள் “அம்பேத்கர் ஜெயந்தி” அல்லது “பீம் ஜெயந்தி” என அழைக்கப்பட்டு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2025 ஆம் ஆண்டில் அவருடைய 134 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, “டாக்டர்.பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் சமூகத்திற்கும் அரசிலையமைப்பிற்கும் ஆற்றிய பங்களிப்பிற்காக, அவரது பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக” மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு, அம்பேத்கர் பிறந்த நாளை “சமத்துவ நாள்” என அங்கீகரித்து, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஆண்டுதோறும் ஏற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


























