தருமபுரி ரேஷன் கடை தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!
தருமபுரி மாவட்டத்திற்கான ரேஷன் கடை தேர்வு முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தருமபுரி ரேஷன் கடை தேர்வு முடிவுகள்:
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 5578 விற்பனையாளர், 925 எடையாளர் பணிக்கு கடந்த ஆண்டு தமிழக அரசின் கூட்டுறவுத்துறை சார்பாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இதில் விற்பனையாளர் பணியிடத்துக்கு 10ம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு மாதாந்திர ஊதியமாக 9 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அதே போல, கட்டுநர் பணிக்கு 8ம் வகுப்பு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டது.
TN MRBயில் மாபெரும் வேலைவாய்ப்பு 2023 – 2250 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.62000/-
இப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வும் இல்லாமல், கல்வித் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வில் (50:50 மதிப்பெண்கள்) பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனால் விற்பனையாளர் பணிக்கு 3.75 லட்சம் பேரும், எடையாளர் பணிக்கு 41000 பேரும் விண்ணப்பித்திருந்தனர். மாவட்ட வாரியாக நேர்காணல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. அதன் படி, இன்று தருமபுரி மாவட்டத்திற்கான ரேஷன் கடை நேர்காணல் முடிவுகள் வெளியாகி உள்ளது.