கரையைக் கடந்த தாழ்வு மண்டலம்.. இன்றைய வானிலை எப்படி இருக்கும்?? விவரம் உள்ளே!!
மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (அக்டோபர் 17) அதிகாலை 4.30 அளவில் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது. இது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாட்டின் பகுதி மேல் தற்போது நிலவி வருகிறது.
BREAKING NEWS:தொடர் மழையால் சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா..?? ” இதோ உங்களுக்காக”…!!
இந்நிலையில் இன்றைய வானிலை குறித்து, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் அவர்கள் முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதில், ‘சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று வெயில் அடிக்கும்’. ‘அவ்வப்போது காற்றடிக்க கூடும்’. ‘இன்று மாலை முதல் நாளை காலை வரை மழைக்கு வாய்ப்பு’. ‘சென்னை, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இரவு இடி இடிக்கக் கூடும்’ என்று தெரிவித்துள்ளார்.
























