ஊதியம், ஓய்வூதிய நிலுவைத் தொகை – உயர் நீதிமன்றம் கேள்வி!!
டெல்லியில் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாநகராட்சியிடம், தற்போதைய காலங்களில் அரசியல் பிரச்சாரத்திற்காக அதிகம் செலவிடப்படுகிறது. ஆனால் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க நிதி இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம்:
கடந்த ஆண்டு கொரோனா காலம் என்பதால் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருளாதாரம் வெகுவாக பாதித்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஊதியம் பெறுவதில் சிக்கல் எழுந்தது. தற்போது நாட்டில் இயல்பான நிலை திரும்பி நாட்டின் பொருளாதாரம் சீரடைந்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் – 71.79 சதவீத வாக்குப்பதிவு!!
ஏற்கனவே இந்த வழக்கில் நீதிமன்றம் ஏப்ரல் மாதம் 5ம் தேதிக்குள் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதன் காலவகாசத்தை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 30 வரை நீட்டிக்குமாறு மாநகராட்சி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கூறியதாவது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஊதியம் பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை.
TN Job “FB
Group” Join Now
ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறும் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. பணிகளுக்கு அமர்த்திய மாநகராட்சி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் வழிவகையை கண்டறிய வேண்டும். இதற்கு நிதி பற்றாக்குறை ஓர் காரணம் அல்ல. இது குறித்து மாநகராட்சி தரப்பில் கூறியதாவது, ஊதியத்திற்கான தொகையை மத்திய அரசு செலுத்தியது. ஆனால் அதில் சிலவற்றை கழித்து தான் செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழக பள்ளி, கல்லூரிகளில் கிருமிநாசினி தெளிப்பு – கொரோனா தொற்று எதிரொலி!!
இதற்கு நீதிபதி கூறியதாவது, உங்கள் பொறுப்பை நீங்கள் தட்டிக்கழிக்க முடியாது, தற்போது நிதிப்பற்றாக்குறை இருந்ததால், அரசியல் தலைவர்கள் தினமும் நாளிதழில் தங்கள் புகைப்படங்களை விளம்பரமாக வெளியிடுகின்றனர். இதற்கு நிதி உள்ளதா??தற்போதைய காலத்தில் அரசியல் பிரச்சாரத்திற்கு செலவிட நிதியுள்ளது. ஆனால் ஊதியம் வழங்க நிதியில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்குவதன் மூலம் அனைவரும் நல்லெண்ணம் பெறுவீர்கள் என்று கூறி இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 27ம் தேதி அன்று ஒத்திவைத்து.