தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் தாமதம் – பணிக்கு சேர முடியாத நிலையில் தேர்வர்கள் !!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழை தமிழக அரசு வழங்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒன்றரை மாதம் ஆகியும் இன்னும் தமிழக அரசு ஆயுள் கால அனுமதி வழங்கப்படவில்லை.
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் :
தமிழகத்தில் ஆசிரியர் கல்வி படிப்பை முடித்தவர்கள் அரசு ஆசிரியர் பணிக்கு செல்வதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வாணையம் நடத்தும் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய வேண்டும். அதன் பின் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் பணி நியமனம் செய்யப்படும். ஏற்கனவே கடந்த வருடங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்னும் பணி ஆணை வழங்கப்படாமல் உள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணத்தால் நடைபெற இருந்த (TET ) தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்று 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது.
காரணமின்றி சந்தியாவை வெறுக்கும் சரவணன் – இன்றைய “ராஜா ராணி” எபிசொட்!!
அதற்குள் வேலைக்கு சேராதவர்கள், மீண்டும் தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என கூறப்பட்டது. இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் ஆசிரியர்கள் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று மத்திய கல்வி அமைச்சகம் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்கள், இனி ஆயுள் முழுதும் செல்லும் என கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து. மேலும் சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் நடத்திய, (CTET) என்ற, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுதும் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இந்தநிலையில் தமிழக அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய, ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழுக்கு, இன்னும் ஆயுள் கால அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான எந்த அறிவிப்புகளையும் தற்போது வரை அரசு வெளியிடவில்லை மேலும் மத்திய அரசின் ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒன்றரை மாதம் ஆகியும் , பள்ளி கல்வித்துறை சார்பில், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் 2013, 2017 மற்றும், 2019 ம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, 90,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு சேர முடியாத நிலையில் உள்ளனர்.