சிலிண்டர் விலை முதல் ஆதார் அப்டேட் வரை.. டிசம்பரில் வரும் 13 புதிய விதிகள் – கட்டாயம் பாருங்க!

0
சிலிண்டர் விலை முதல் ஆதார் அப்டேட் வரை.. டிசம்பரில் வரும் 13 புதிய விதிகள் - கட்டாயம் பாருங்க!
சிலிண்டர் விலை முதல் ஆதார் அப்டேட் வரை.. டிசம்பரில் வரும் 13 புதிய விதிகள் - கட்டாயம் பாருங்க!
சிலிண்டர் விலை முதல் ஆதார் அப்டேட் வரை.. டிசம்பரில் வரும் 13 புதிய விதிகள் – கட்டாயம் பாருங்க!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வரும் மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 13 மாற்றங்களால் மக்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாற்றங்கள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு இன்னும் ஒரே மாதத்தில் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் மிக முக்கியமான மாற்றங்கள் வர இருப்பதால், உங்களுடைய செலவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. மக்களுக்கு வங்கி துறையில் இருந்து தொலைத் தொடர்பு துறை வரை 13 மாற்றங்கள் வர இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

சிலிண்டர் விலை

டிசம்பர் மாத தொடக்கத்தில் சிலிண்டர் விலை மாற இருக்கிறது. அதில் வீட்டு சிலிண்டரில் மாற்றம் இருக்க போவதில்லை. ஆனால் வணிக சிலிண்டர் விலை மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் சான்றிதழ்

மத்திய அல்லது மாநில அரசு ஓய்வூதியதாரர்கள் நவம்பர் மாதத்திற்குள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால் டிசம்பர் மாதம் ஓய்வூதியம் கிடைக்காது.

சிம் கார்டு விதிமுறைகள்

தொலைத்தொடர்பு துறையில் டிசம்பர் 1 முதல், சிம் கார்டு வாங்க விற்க புதிய விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கிறது. போலி சிம் கார்டுகளை தடுக்க இந்த விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

HDFC கிரெடிட் கார்டு மாற்றம்

பெரிய தனியார் வங்கியான HDFC அதன் Regalia Credit Card-ல் கிடைக்கும் Lounge Axis திட்டத்தில் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றம் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

ரிசர்வ் வங்கி

வங்கிகள் முழு கடனையும் திருப்பிச் செலுத்திய பிறகு, உத்தரவாதத்திற்குப் பதிலாக வைத்திருக்கும் ஆவணங்களை சரியான நேரத்தில் திருப்பித் தரவில்லை என்றால், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிக்கிறது. இது டிச 1 முதல் அமலுக்கு வருகிறது.

எஸ்பிஐ அம்ரித் கலாஷ் காலக்கெடு:

பாரத ஸ்டேட் வங்கி (SBI) அம்ரித் கலாஷ் சிறப்பு எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதன் படி டிச. 31 வரை இது அமலில் இருக்கும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தக் காலக்கெடு:

ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தை முறையாகச் செயல்படுத்துவதற்கு டிசம்பர் 31, 2023 வரை காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

ஆதார் புதுப்பிப்புக்கான கடைசி தேதி

கடந்த 10 ஆண்டுகளில் உங்கள் ஆதார் விவரங்களை நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால், டிசம்பர் 14 வரை இலவசமாக புதுப்பிக்கலாம் என UIDAI அறிவித்துள்ளது

வீட்டு கடன் சலுகை

SBI வங்கியில் வீட்டுக் கடன்களில் 65 அடிப்படைப் புள்ளிகள் (bps) வரை தள்ளுபடி வழங்கும் சிறப்பு விளம்பரத்தை நடத்தி வருகிறது. இதற்கு டிச 31 கடைசி நாள்.

Mutual Funds, Demat Nomination கடைசி நாள்

டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள், மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் வைத்திருப்பவர்களுக்கு நியமன (Nomination) விருப்பத்தை வழங்குவதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்துவாங்கும் – முக்கிய எச்சரிக்கை!!

UPI ஐடி

Google Pay, Paytm, PhonePe போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக செயலில் இல்லாத UPI ஐடி எண் டிசம்பர் முதல் செயலிழக்கப்படும்.

IDBI சிறப்பு FD:

IDBI வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான தொகைக்கான Fixed Deposit வட்டி விகிதங்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த சிறப்பு FDகளின் முதிர்வு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கிறது.

இந்தியன் வங்கி சிறப்பு FD:

இந்தியன் வங்கி “Ind Super 400”, “Ind Supreme 300 Day” என்ற உயர் வட்டி விகிதங்களை வழங்கும் சிறப்பு FDகளை டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!