தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்று 1 சவரன் எவ்வளவு தெரியுமா?

0
தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை - இன்று 1 சவரன் எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை - இன்று 1 சவரன் எவ்வளவு தெரியுமா?
தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை – இன்று 1 சவரன் எவ்வளவு தெரியுமா?

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று 1 கிராமிற்கு மேலும் ரூ.9 அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதா என்று மக்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

தங்கத்தின் விலை:

மக்கள் தங்கள் சேமிப்பை மிகவும் பாதுகாப்பான வகையில் தொடங்க முடிவு செய்து தான் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்குகின்றனர். மற்ற வகையான முதலீடுகள் மீது நம்பகத்தன்மை குறைந்து, அதன் மீது பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால், முதலீட்டு சந்தையில் தங்கத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. அதிக தேவை இருப்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

பொதுவாக தினமும் சில ஏற்ற இறக்கங்கள் தங்கத்தின் விலையில் இருக்கும். ஆனால் கடந்த சில நாட்களாக தொடந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அதவாது நேற்று 22 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5115 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 1 கிராமிற்கு ரூ.9 உயர்ந்து 1 கிராம் ரூ. 5124 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 1 சவரன் ரூ.72 உயர்ந்து ரூ.40,992 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சீனாவை புரட்டி போட்ட புது வகை கொரோனா.. இந்தியாவிலும் ஊடுருவல் – வெளிவந்த அதிர்ச்சி செய்தி!!

Exams Daily Mobile App Download

இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5526 க்கும், 1 சவரன் ரூ.44208க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் ரூ.74.70 க்கும் , 1 கிலோ வெள்ளி ரூ.74700 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்க நகையின் விலை இனி எப்போது குறையும் என்று மக்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!