அட..கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமா…?? “அமெரிக்காவில் கலக்கிவரும் தமிழக முதல்வர்”..!!! அடுத்தது ஆப்பிள்,மைக்ரோசாப்ட் தானா…??

0
அட..கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தமா…?? “அமெரிக்காவில் கலக்கிவரும் தமிழக முதல்வர்”..!!! அடுத்தது ஆப்பிள்,மைக்ரோசாப்ட் தானா…??

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இன்று கூகுள் ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு சென்றுள்ளார்.

முடங்கியது X தளம்..! சோகத்தில் பயனாளர்கள்..!

கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பிரபல நிறுவனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டுள்ளார். மேலும், அந்நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி முதலீடு வாய்ப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், தற்போது பிரபல நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்களை தமிழ்நாட்டில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், இந்த ஆய்வகத்தின் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வரும், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 20 லட்சம் இளைஞர்களுக்கு AI தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்க உள்ளதாகவும் மற்றும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான PIXEL 8 செல்போன்களின் உற்பத்தியை விரிவுபடுத்தும் ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, ஆப்பிள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!