Daily Current Affairs March 11, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 11, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 11 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

இந்திய கடற்படையில் மூன்றாவது ஸ்கார்பியன் ரக கப்பல் சேர்க்கப்பட்டது!!

  • இந்திய கடற்படையில் மூன்றாவது ஸ்கார்பியன் ரக கப்பலான ஐஎன்எஸ் காரன்ச் சேர்க்கப்பட்டது. இதற்காக மும்பை கடற்படை தளத்தில் விழா நடைபெற்றது. இதில் கடற்படை தளபதி கராம்பிர் சிங், முன்னாள் தளபதி விஎஸ் ஷெகாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரான்ஸ் நாட்டின் தொழிநுட்ப உதவியுடன் இந்தியாவின் எம்டிஎல் நிறுவனம் இணைத்து இந்த கப்பலை வடிவமைத்துள்ளது.
  • “தற்சார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சக்தி வாய்ந்த அதிநவீன ஆயுதங்கள், கடலுக்கு அடியிலும், மேற்பரப்பில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் கண்டறியும் சென்சார் கருவிகள் இந்த கப்பலில் பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவ அமைச்சர் 19 ஆம் தேதி இந்தியா வருகை!!

  • அமெரிக்காவின் தற்போதைய ராணுவ அமைச்சராக பதவி ஏற்றுள்ள லாய்டு ஜெ ஆஸ்டின் வரும் மார்ச் 19 ஆம் தேதி இந்தியா வர இருக்கிறார். தனது முதல் வெளிநாட்டு பயணத்தின் பகுதியாக இவர் இந்தியா வர இருக்கிறார்.
  • தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தியாவில் தங்க திட்டமிட்டிருக்கும் அமைச்சர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங்கை சந்திக்க இருக்கிறார்.
  • அதே போல் இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ நடவடிக்கைகளை உறுதி செய்யவும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர்.

அமெரிக்கா பற்றி

தலைநகரம் – நியூயார்க்

அதிபர் – ஜோ பைடன்

துணை அதிபர் – கமலா ஹாரிஸ்

நாணயம் – டாலர்

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா உட்பட நான்கு நாடுகள் பங்கேற்கும் உயர்மட்ட தலைவர்கள் மாநாடு (க்வாட்)!!

  • இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்கள் மாநாடு நாளை நடைபெற இருக்கின்றது.
  • கடந்த 2004 அம்மா ண்டு உருவாக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு 2007 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது. முதன் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் நான்கு நாடுகளின் தலைவர்கள் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கின்றனர்.
  • கொரோனா கால சவால்கள், பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவில் ஆய்வு மையம் அமைக்க சீனா மற்றும் ரஷ்யா அரசு கூட்டு சேர்ந்துள்ளது!!

  • நிலவில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்பதற்காக சீனா மற்றும் ரஷ்யா அரசாங்கம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பு அல்லது சுற்றுவட்டார பாதையில் இந்த ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்கான ஒப்பந்தம் சீன தேசிய விண்வெளி நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ஜாங் கேஜியான் மற்றும் ரஷ்ய விண்வெளி தலைவரான டிமிட்ரி தலைமையில் கையெழுத்தானது.
  • இந்த ஆய்வு மையத்தினை இதர நாடுகளும் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் இணைத்து திட்டமிடல், வடிவமைப்பு மற்றும் மேம்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

உத்தரகாண்ட் மாநில புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு!!

  • உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவ்த் தேர்வாகியுள்ளார்.
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத், டேராடூனில் நடத்த பாஜக எம்எல்ஏ.,கள் பொதுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இவர் அந்த மாநிலம் முதன் முதலாக பிரிக்கப்பட்டபோது கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகாண்ட் பற்றி

ஆளுநர் – பேபி ராணி மௌரியா

முதல்வர் – தீரத் சிங் ராவத்

தலைநகரம் – டெஹ்ரதன்

நாட்டிலேயே கட்டுமான செலவு சென்னையில் தான் குறைவு என்று ஆய்வில் தகவல்!!

  • நமது நாட்டிலேயே சென்னை நகரத்தில் தான் கட்டுமானத்திற்கான செலவு குறைவு என்று ஜேஎல்எல் இந்தியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அதிகமாக கட்டுமான செலவாகும் நகரமாக மும்பை உள்ளது.
  • சென்னை மற்றும் ஹைதெராபாத் நகரங்களில் கட்டுமான செலவு மும்பையை விட 14 சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஒரு சதுரடிக்கு 5,625 ரூபாய் ஆகுகிறது என்று அந்த ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல் வர்த்தக கட்டடங்களுக்கான செலவு ஒரு சதுர அடிக்கு 3,875 ரூபாய் என்று உள்ளது.

விருதுகள்

நடிகர் அமிதாப்பச்சனுக்கு சர்வதேச விருது 2021!!

  • மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் வசிக்கும் நடிகர் அமிதா பச்சனுக்கு FIAF எனப்படும் சர்வதேச திரைப்பட காப்பகங்களின் கூட்டமைப்பு வழங்கும் விருது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 19 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. அப்போது நடிகர் அமிதாப்பச்சனுக்கு மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் கிறிஸ்டோபர் நோலன் ஆகியோர் இந்த விருதினை வழங்க உள்ளனர்.
  • இந்த விருதினை பெற இருக்கும் முதல் இந்தியர் இவரே ஆவார். இந்த ஆண்டு FIAF தனது 12 வது ஆண்டு விழாவினை கொண்டாட இருக்கின்றது.

FIAF பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1938

தலைமையகம் – பெல்ஜியம்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு 7 இந்திய பெண்களுக்கு அமெரிக்க விருது!!

  • சர்வதேச பெண்கள் தினத்தினை முன்னிட்டு இந்தியாவின் வெவ்வேறு துறைகளில் சாதித்து வரும் 7 பெண்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தின் இந்தியர்கள் கூட்டமைப்பு இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நியூயார்கில் உள்ள இந்திய துணை தூதர் ரன்திர் ஜெய்சால் இந்த விருதுகளை சாதனையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கியுள்ளார்.

விருதுகளை பெற்றவர்கள்

  1. தேஜல் அமின் – “தூய்மை இந்தியா” திட்டத்தின் தூதுவர்
  2. உமா ராணி – மருத்துவர்
  3. ராஷ்மி அகர்வால் – செவிலியர்
  4. அபா ஜெய்ஸ்வால் – பல் மருத்துவர்
  5. சபீனா – சட்ட ஆலோசகர்
  6. ரக்ஷனா ஷா – நடிகை மற்றும் தயாரிப்பாளர்
  7. மாஸ்க் ஷுவாட் – குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி வழங்கும் அமைப்பு

விளையாட்டு நிகழ்வுகள்

பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களின் தரவரிசை பட்டியல் வெளியீடு!!

  • சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி 814 புள்ளிகளுடன் 5 ஆம் இடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பாண்ட் 747 புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் உள்ளனர்.
  • இவர்களுடன் நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோலஸ் அதே புள்ளிகளுடன் 7 ஆம் இடத்தில் உள்ளார். 3 வீரர்கள் ஒரே இடத்தினை பிடித்ததால் 8,9 மற்றும் 10 இடம் யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அஸ்வின் 850 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தினை இந்த முறை பெற்றுள்ளார். பும்ராஹ் 739 புள்ளிகளுடன் 10 இடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவராக தாமஸ் பேச் நியமனம்!!

  • சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவராக 67 வயதான தாமஸ் பேச் மீண்டும் தேர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனி நாட்டினை சேர்ந்த பேச் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலமாக 93 -1 என்ற கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றார்.
  • இணைய வழியில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இவரது பதவி காலம் அடுத்து வரும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதலாக, கொரோனா அச்சம் இருந்தாலும், முன்கூட்டியே திட்டமிட்டபடி ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

Download TNPSC Notification 2021 

முக்கிய நாட்கள்

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழா 2021!!

  • மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
  • மத்திய தொழில் பாதுகாப்புப் படை நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு கடந்த 1969 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி நிறுவகிக்கப்பட்டது.

Download CA Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!