Daily Current Affairs February 26 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs February 26 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)
Daily Current Affairs February 26 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Daily Current Affairs February 26 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs February 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 26 பிப்ரவரி 2021

தேசிய நிகழ்வுகள்

இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம்!!

  • இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம் 2021 பிப்ரவரி 22 முதல் 24 வரை புது டெல்லியில் நடைபெற்றது.
  • அமெரிக்க ராணுவத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழு நேரடியாகவும்,  அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் இருந்து 40 அதிகாரிகள் காணொலி மூலமும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
  • பசிபிக் அமெரிக்க ராணுவத்தின் துணை தலைமை தளபதி, மேஜர் ஜெனரல் டேனியல் மாக்டேனியல் அமெரிக்க குழுவுக்கு தலைமை வகித்தார். இந்திய தரப்பில் இருந்து 37 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வம் சார்ந்த  தற்போதைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மாநில நிகழ்வுகள்

கோவையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்!!

  • நெய்வேலியில்  1000 மெகாவாட் திறனுள்ள புதிய அனல் மின் திட்டம் மற்றும்  என்எல்சிஐஎல் நிறுவனத்தின் 709 மெகா வாட் சூரிய மின் சக்தி திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணித்தார்.
  • வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்  5 மெகா வாட் திறனில்  மின் தொகுப்பு அமைப்பது மற்றும் கீழ் பவானி கால்வாய் திட்டத்தை  விரிவுபடுத்துதல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
  • வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 8 வழி கோரம்பள்ளம் பாலம் மற்றும் ரயில்வே பாலம் மற்றும் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்புகளையும்  பிரதமர் திறந்து வைத்தார்.
  • இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 2021

ரூ.1,295 கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!!

  • சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர், மணலி, மாதவரம் மற்றும் அம்பத்தூர் ஆகிய 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 48 வார்டுகளில் தனியார் நிறுவனம் மூலம் வீடுதோறும் திடக்கழிவுகளை சேகரித்தல், சேகரித்த கழிவுகளை அதற்குரிய பதப்படுத்தும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் திட்டங்களை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் இயக்ககம் மற்றும் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.2 ஆயிரத்து 181 கோடியே 50 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது முதல்வர் இந்த திட்டங்களை துவக்கி வைத்தார்.

புதுச்சேரியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்!!

  • காரைக்கால் மாவட்டத்தை உள்ளடக்கிய விழுப்புரம் – நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்துக்கும், காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மெர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் புதிய வளாகத்தின் முதல் பகுதிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
  • மேலும், சாகர்மாலா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சிறு துறைமுகம் உருவாக்குவதற்கும், புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில், தடகள வீரர்களுக்கான சிந்தடிக் ஓடு தளத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
  • பொருளாதார வளத்திற்கும், நல்ல உடல்நலனிற்கும் நெருங்கிய தொடர்புள்ளதால், உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியா ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார்

Download TNPSC Notification 2021 

மாநாடுகள்

இந்திய பொம்மை கண்காட்சி பிப்ரவரி 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்!!

  • இந்திய பொம்மை கண்காட்சி 2021-ஐ வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்க இருக்கிறார்.
  • பொம்மைகள், குழந்தையின் மன வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றுவதுடன், அவர்களின் உளவியல் இயக்கம் மற்றும் அறிவாற்றல் திறமைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.
  • இந்த கண்காட்சி பிப்ரவரி 27 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெறும். நிலையான இணைப்புகளை உருவாக்கவும், பொம்மை தொழிலில் ஒட்டுமொத்த வளர்ச்சி குறித்த விவாதங்களை ஊக்குவிக்கவும் வாங்குவோர், விற்பனையாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், வடிவமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களையும் காணொலி வாயிலாக இணைப்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும்.

குளோபல் பயோ இந்தியாவின் இரண்டாவது பதிப்பு மார்ச் 1 முதல் 3 வரை டிஜிட்டல் தளத்தில் நடைபெறவிருக்கிறது!!

  • இந்திய உயிரி தொழில்நுட்பத் துறையின் பலம் மற்றும் வாய்ப்புகளை தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் விதமாக, குளோபல் பயோ இந்தியாவின் இரண்டாவது பதிப்பு 2021 மார்ச் 1 முதல் 3 வரை டிஜிட்டல் தளத்தில் நடைபெறவிருக்கிறது.
  • ஐந்து டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருளாதாரத்தை எட்டும் இலட்சியத்திற்கு உயிரி தொழில்நுட்பத் துறை பெரும் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த வருட குளோபல் பயோ இந்தியாவின் கருப்பொருள் ‘வாழ்க்கையை மாற்றி அமைத்தல்’ இருக்கும். ‘உயிரி அறிவியலில் இருந்து உயிரி பொருளாதாரத்தை நோக்கி’ என்பதே ஆகும்.

மருந்தியல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் துறை பற்றிய 6-வது சர்வதேச மாநாடில் மத்தியமைச்சர் பியூஷ் கோயல் உரை!!

  • இந்திய மருந்தியல் மற்றும் சுகாதாரத் துறையில் உயர்ந்த தரத்தை நிலைநாட்டுவதற்கான வசதி, உறுதித்தன்மையில் சிறந்த வழிமுறைகளை பின்பற்றுமாறு மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கேட்டுக்கொண்டுள்ளார்.
  • கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அதிக எண்ணிக்கையிலான நாடுகளுக்கு சமமான அளவில் மருந்துகள் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் டிரிப்ஸ் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகள் முன்வைத்ததை நினைவு கூர்ந்த அமைச்சர், உலக வணிக அமைப்பின் 57 உறுப்பினர்கள் தற்போது இந்த முடிவிற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்தார்.

16-வது ஃபிக்கி உயர்கல்வி மாநாட்டில் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ துவக்க உரை!!

  • இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 16- வது உயர்கல்வி உச்சிமாநாடு 2021-இல் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ இன்று துவக்க உரையாற்றினார்.
  • இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.
  • ”உயர்கல்வி  2030, தாங்குதன்மை, புதுமை, நிலைத்தன்மை, நிர்மானம்” என்பது தான் இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

  • இந்தியாவில் எளிதில் தொழில் செய்வதை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஒழுங்குமுறை அமலாக்கத்தை மேம்படுத்தவும், தரவு பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகமும், மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • பெருநிறுவனங்கள் விவாகரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் மனோஜ் பாண்டே, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் பி.பி.குப்தா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இரு அமைப்புகளும், தானியங்கி முறையில் சீராக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் “நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு” திட்டம்!!

  • சென்னையில் மாநகராட்சியுடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி வழங்கும் `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு’ திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • இந்த `நம்ம சென்னை ஸ்மார்ட் கார்டு’ அட்டையை மாநகராட்சியின் சேவைகள், வாகன நிறுத்தக் கட்டணம், நாடு முழுவதும் ரூபே அட்டை வழியே பணப் பரிவர்த்தனை செய்யும் உணவகங்கள், கடைகள், சில்லறை வணிகம் சார்ந்த இடங்கள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் விற்பனையகங்களில் பயன்படுத்தலாம்.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!