அண்ணா பல்கலையில் 4% மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் – ஆர்டிஐ தகவல்!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் விவரங்கள் தொடர்பாக பெறப்பட்ட ஆர்டிஐ தகவலின் படி, 4% அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து மருத்துவ படிப்புககளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் தமிழக அரசு மருத்துவ படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கி உள்ளது. அதன் பின் மருத்துவ படிப்புகளில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதே போல் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறித்து கணக்கிட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டுகளில் சேர்க்கப்பட்ட அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கீடு செய்ய அறிவிப்பு வெளியிட்டது.
தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
ஆனால் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐ மனுவில் அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 4 கல்லூரிகள் மட்டுமே தகவல்கள் வழங்கியது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 4% மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்கலைக்கழக்தின் கீழ் உள்ள CEG, ACTECH, MIT, SAP உள்ளிட்ட கல்லூரிகளில் 2018-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 148 பேர் மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள், அதே போல் 2017-18ம் ஆண்டு சேர்க்கையில் 144 மட்டுமே அரசு பள்ளி மாணவர்கள்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்