சிலிண்டரின் விலையில் புதிய மாற்றம் – பொதுமக்கள் ஹாப்பி!!
தமிழகத்தில் வணிக சிலிண்டர் ரூ.57 குறைந்து ரூ.1942க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.918க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சிலிண்டரின் விலை:
இந்தியாவில் ஒவ்வொரு மாதத்தின் துவக்கத்திலும் பண வீக்கத்தைப் பொறுத்து எரிபொருட்களின் விலை மற்றும் சிலிண்டரின் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததையொட்டி கடந்த மாதத்தில் இருந்து வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த மாதத்தில் வணிக சிலிண்டர் ரூ. 203 உயர்த்தப்பட்டு ரூ.1898க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் ரூ. 101.50 உயர்த்தப்பட்டது.
மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு இல்லை – உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!
இந்நிலையில், வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.57 குறைந்து ரூ.1942க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலகி ரூ.918க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.