நடப்பு நிகழ்வுகள் – மே 28, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 28, 2019

முக்கியமான நாட்கள்

மே 28 – சர்வதேச அம்னெஸ்டி தினம்
 • மே 28 அன்று சர்வதேச அம்னெஸ்டி தினம் அனுசரிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டு முதல் மே 28 அன்று இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
 • மனித உரிமைகள் மீறல்கள் தடுக்க, மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும், அதன் உரிமைகள் மீறப்பட்டுள்ளவர்களுக்கான நீதிக்காக போராடுவதற்கும் மற்றும் சர்வதேச சட்டத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பை விரிவுபடுத்துவதற்கும் மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்ற ஒரு அரசு சாரா அமைப்பு ஆகும்.
மே 28 – உலக பசி தினம்
 • பசி திட்டம் என்னும் நிறுவனம் உலக பசி தினம் என்று அழைக்கப்படும் ஒரு முயற்சியைத் துவங்கியது. மே 28 அன்று இது அனுசரிக்கப்படுகிறது.பசி திட்டம் என்னும் நிறுவனம்  உலக பசிக்கு ஒரு பன்முக தீர்வை கண்டறியும் ஒரு உலகளாவிய அமைப்பாகும். பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவருவதன் நோக்கத்துடன் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
வி.டி சாவர்க்கர் பிறந்த நாள்:
 • சுதந்திரவீர் விநாயக் தாமோதர் சாவர்க்கரின் பிறந்தநாள் மே 28 அன்று கொண்டாடப்படுகிறது .  இவர் 1883 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா நாசிக்கில் பிறந்தார் மற்றும் வீர் சாவர்க்கர் என்று பிரபலமாக அழைக்கப்படுவார் . அவர்  பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடிய ஒரு புரட்சியாளராவார்.

தேசிய செய்திகள்

பஞ்சாப்
இந்தோ-பாக் கார்த்தார்பூரின் காரிடோரில் சந்திப்பு:
 • பஞ்சாப் மாநிலத்தில் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானாக் ஆலயத்தை கார்த்தார்பூரின் குருத்வாரா தர்பார் சாஹிபுடன் இணைக்கும் ஒரு நடைபாதையில் நடைமுறைகளை விவாதிக்க பாகிஸ்தான் மற்றும் இந்தியா அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டம் கார்த்தார்பூர் ஜீரோ பாயிண்டில்  நடைபெற்றது.
கேரளா
ஐஐஐடிஎம்- கே [IIITM-K] விரைவில் டெக்னொசிட்டி வளாகத்தில் புதிய வசதிகளுடன்  இடம் மாற்றப்படவுள்ளது 
 • மாநில அரசின் கீழ் செயல்படும் சுயாதீன நிறுவனமான இந்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை நிறுவனம் – கேரளா (IIITM-K) , பல்லிபுரத்தின் டெக்னோசிட்டி வளாகத்தில் ஒரு புதிய உலகத்தர வசதிகளுடன் இடம் மாற்றப்படவுள்ளது
 • 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ஐஐஐடிஎம்- கே தற்போது டெக்னோபார்க் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது மற்றும் கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் (CUSAT) இணைக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு முன்னாள் ஜனாதிபதி நஷீத் புதிய சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டார்
 • மாலத்தீவில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் புதிய பாராளுமன்றம் அல்லது மஜிலிஸின் சபாநாயகராக பரிந்துரைக்கப்பட்டார். மக்களின் பாராளுமன்றம் அல்லது மஜிலிஸின் சபாநாயகராக மாலத்தீவின் ஜனநாயகக் கட்சியால் நஷீத் ஒரு மனதாக பரிந்துரைக்கப்பட்டார்.
முதல் ஐ.நா. வசிப்பிட சபையின் நிர்வாகக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது
 • கென்யாவின் நைரோபியில் ஆரம்பிக்கப்பட்ட குழுவின் வருடாந்திர அமர்வில், முதல் ஐ.நா. வசிப்பிட சபையின் நிர்வாகக் குழுவிற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 • ஐ.நா.- வாழ்விடம் குழுவின் சிறப்பு தீம் : “Innovation for Better Quality of Life in Cities and Communities”.

அறிவியல்

உலகளாவிய  ஆறுகளில் உயிர் கொல்லி கழிவுகள் மடங்கு அதிகரித்துள்ளது
 • உலகில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 300 மடங்கு உயிர் கொல்லி கழிவுகளால் மாசடைந்துள்ளதாக  மே 27ல்  நடந்த ஒரு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது .உலகில் மொத்தம் 72 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட  711 ஆறுகளின் மாதிரிகளில் மூன்றில் இரண்டு பங்கு உயிர்கொல்லி கழிவுகள் இருப்பதாக ஹெல்சிங்கியில் உள்ள சுற்றுச்சூழல் நச்சுயியலாளர்களின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார செய்திகள்

இந்தியாவில் முதல் இசைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை யமஹா நிறுவனம் தொடங்வுள்ளது
 • ஜப்பானை தலைமை இடமாக கொண்ட யமஹா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் இசைக்கருவி தொழிற்சாலையை தொடங்கவுள்ளது இதன் மூலம் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் போர்ட்டபிள் கீபோர்டுகள் மற்றும் இரண்டு லட்ச கிட்டார்களை ஆண்டுதோறும் தயாரிக்க முடிவுசெய்துள்ளது.

பதவியேற்புகள்

அருணாச்சல பிரதேச முதல்வராக பேமா காண்ட் பதவி ஏற்றார்
 • இரண்டாவது முறையாக அருணாச்சல பிரதேச முதலமைச்சராக பேமா காண்ட் பதவி ஏற்றார்.

பாதுகாப்பு செய்திகள்

ஆகாஷ் -1 எஸ் -யை வெற்றிகரமாக சோதனை செய்தது DRDO
 • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஆகாஷ்-1 எஸ் பாதுகாப்பு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதது, மேம்படுத்தப்பட்ட இப்பாதுகாப்பு ஏவுகணை மூலம் எதிரிகளின் போர் விமானங்கள் மற்றும் டிரான்ஸ்களை வானிலே அழிக்கமுடியும்.

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி
 • ரஹி சர்னாபாத் உலக சாம்பியன் மற்றும் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியானா ஒலினா கொஸ்டேவிக்கை 37-36 என்ற செட் கணக்கில் தோற்கடித்து, தங்கம் வென்றார். இதன் மூலம் இவர்  ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். சௌரப் சவுதரி ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்றார்.
வில்வித்தை உலக கோப்பை
 • ரஜத் சௌஹான், அபிஷேக் வர்மா மற்றும் அமன் சாய்னி ஆகியோரின் ஆண்கள் அணி துருக்கியின் அன்டாலியாவில் வில்வித்தை உலகக் கோப்பை வெண்கலப் பதக்கத்தை வென்றது.
 • ஜோதி சுரேகா வென்னம், மஸ்கன் கிரார், ஸ்வாதி தூத்வால் ஆகியோரின் மகளிர் அணி, வெண்கலப் பதக்கத் திற்கான போட்டியில் பிரிட்டனின் லயலா அன்னிசன், ஏலா கிப்சன் மற்றும் லூசி மேசன் ஆகியோரின் மகளிர் அணியுடன்  2 புள்ளி வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – மே 28, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!