நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 30, 2019
TNPSC Group 4 OnlineTest
Series 2019
முக்கியமான நாட்கள்
ஜூன் 30 – சர்வதேச சிறுகோள் தினம்
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை டிசம்பர் 2016ல் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு ஜூன் 30ஐ சர்வதேச சிறுகோள் தினமாக அறிவித்தது. “1908 ஜூன் 30 அன்று ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள சைபீரியாவில் ஏற்பட்ட துங்குஸ்கா தாக்கத்தின் ஆண்டு நிறைவை சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கவும், பொதுமக்களுக்கு சிறுகோள் தாக்க அபாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. “
- சர்வதேச சிறுகோள் தினம், சிறுகோள் தாக்க அபாயத்தைப் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, புவியருகு விண்பொருட்கள் அச்சுறுத்தல் ஏற்பட்டால் உலக அளவில் எடுக்கப்பட வேண்டிய நெருக்கடி தகவல்தொடர்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜூன் 30 – சர்வதேச பாராளுமன்றவாத தினம்
- ஜூன் 30 என்பது சர்வதேச பாராளுமன்றவாத தினத்தை கொண்டாட நியமிக்கப்பட்ட தினமாகும். 1889 ஆம் ஆண்டு ஜூன் 30ல், பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பான பாராளுமன்றங்களுக்கு இடையேயான மையம் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த நாள் பாராளுமன்றங்களையும், அரசாங்கத்தின் பாராளுமன்ற அமைப்புகள் உலகெங்கிலும் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வழிகளையும் கொண்டாடுகிறது. பாராளுமன்றங்கள் சவால்களை அடையாளம் காண்பதற்கும், அவற்றை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான வழிகளுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய செய்திகள்
அசாம்
- அசாமில் பண்ணை உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், நீர்வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதையும் உறுதி செய்வதற்காக, நீர்ப்பாசனத் துறை விரைவில் சொட்டு நீர்ப்பாசனத் திட்டமான ‘ஹர் கெத் கோ பானி’-ஐ செயல்படுத்துகிறது. நிலத்தடி நீருக்கான அணுகலை அதிகரிக்கும் இந்த முயற்சி பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சயி திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
குஜராத் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படியை 3% உயர்த்தியது
- குஜராத் அரசு ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப் படியை (டிஏ) 3 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இப்போது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் தற்போதுள்ள 9 சதவீதத்திலிருந்து – புதிதாக உயர்த்தப்பட்ட 3% சேர்த்து 12 சதவிகிதம் அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச செய்திகள்
எஃப் -22 ரக போர் விமானத்தை அமெரிக்கா முதன்முறையாக கத்தாருக்கு அனுப்பியது
- அமெரிக்கா முதல் முறையாக கத்தாருக்கு எஃப் -22 ரக போர் விமானத்தை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பு ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில் வளைகுடாவில் அமெரிக்கப் படைகளை வலுப்படுத்த மேற்கொண்டது ஆகும். அமெரிக்கப் படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எஃப் -22 ரக போர் விமானம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படையின் மத்திய ராணுவ கமேண்ட் தெரிவித்துள்ளது. அனுப்பப்பட்ட உயர்தர விமானங்களின் எண்ணிக்கையை அமெரிக்கா வெளியிடவில்லை.
அறிவியல் செய்திகள்
நாசாவின் பன்ச்[PUNCH] திட்டம்
- சூரியனை படம்பிடிக்க உள்ள பன்ச்[PUNCH] திட்டத்தை செயல்படுத்த நாசா டெக்சாஸில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது சூரியனின் வெளிப்புற கொரோனாவுக்கு அப்பால் உள்ள பகுதிகளை படமாக்கும் ஒரு முக்கிய திட்டமாகும். இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் சூரிய இயற்பியலாளர் திபாங்கர் பானர்ஜியும் பன்ச் திட்டத்தின் இணை ஆய்வாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “கொரோனா மற்றும் ஹீலியோஸ்பியரை ஒன்றிணைக்க போலாரிமீட்டர்” என்பதைக் குறிக்கும் பன்ச்[PUNCH], சூரியனின் வெளிப்புற கொரோனாவிலிருந்து துகள்கள் சூரியக் காற்றிற்கு மாறுவதைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகிறது.
நியமனங்கள்
ஹரியானாவின் புதிய தலைமை செயலாளர்
- ஹரியானா அரசுமூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான கெஷ்னி ஆனந்த் அரோராவை ஜூன் 30 அன்று மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக நியமித்தது. 1966 ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு ஹரியானாவின் 33வது தலைமைச் செயலாளராக ஆனந்த் அரோரா பொறுப்பேற்க உள்ளார்.
விருதுகள்
நால்கோவுக்கு சமூக வளர்ச்சியில் சிறந்த சமூக பொறுப்புணர்வுக்கான ஜனாதிபதி விருது
- சமூக வளர்ச்சியில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) நிதியை சிறப்பாக பயன்படுத்தியதற்கான ஜனாதிபதி விருதுக்கு ஒடிசாவைச் சேர்ந்த நவரத்னா நிறுவனமான நால்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளது. நால்கோ 2015ல் “அலியாலி ஜியா” என்ற திட்டத்தைத் தொடங்கியது. திறமையான ஏழை மாணவிகளின் கல்வியை மேம்படுத்த அவர்களுக்கு தேவையான உதவியளிக்கும் திட்டத்தைத் தொடங்கிய நால்கோவின் சிஎம்டி, தபன் சந்த்-ஐ கார்ப்பரேட் விவகார அமைச்சகம் பாராட்டியுள்ளது.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 30, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்