நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 21, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 21, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 21 – சர்வதேச யோகா தினம்
  • டிசம்பர் 11, 2014 அன்று, ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21 ஐ சர்வதேச யோகா தினமாக 69/131 தீர்மானத்தின் மூலம் அறிவித்தது. யோகா பயிற்சி செய்வதன் பல நன்மைகள் குறித்து உலகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை சர்வதேச யோகா தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது. யோகா என்பது இந்தியாவில் தோன்றிய ஒரு பண்டைய உடல், மன மற்றும் ஆன்மீக பயிற்சி. ‘யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது மற்றும் உடல் அல்லது நினைவின் ஒன்றிணைப்பைக் குறிக்கும் வகையில் இணைவது அல்லது ஒன்றுபடுவது என்பதாகும்.
  • 2019 தீம்: காலநிலை நடவடிக்கை
ஜூன் 21 – உலக இசை தினம்
  • இசை தினம் என்பது இணைக்கப்பட்ட இலவச பொது நிகழ்வுகளின் தொகுப்பாகும், இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 120 க்கும் மேற்பட்ட நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள 700 நகரங்களிலும் இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. இது 1982 இல் பிரான்சில் உருவானது.
ஜூன் 21 – கோடைகால கதிர்த்திருப்பம்
  • கோடைகால கதிர்த்திருப்பம் ஜூன் 21 அன்று உள்ளது, இது பூமத்திய ரேகைக்கு வடக்கே வாழும் எவருக்கும் 2019 இன் மிக நீண்ட நாளாக இருக்கும். சூரியன் நேரடியாக கடக ரேகைக்கு அல்லது 23.5 டிகிரி வடக்கு அட்சரேகைக்கு மேல் இருக்கும்போது கோடைகால கதிர்த்திருப்பம் ஏற்படுகிறது

தேசிய செய்திகள்

ஓய்வூதியத் துறையின் ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் செல் மற்றும் அழைப்பு மையம்
  • வடகிழக்கு மாநில வளர்ச்சி (தனிப் பொறுப்பு), மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி ஆராய்ச்சி ஆகியவற்றின் இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியத் துறைக்கான ஒருங்கிணைந்த குறை தீர்க்கும் செல் மற்றும் அழைப்பு மையத்தை திறந்து வைத்தார். இது ஓய்வூதியத்துறை மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையால் அமைக்கப்பட்டது. புது தில்லியில் உள்ள ஜன்பத் பவனில் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்காக இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்

ஆந்திராவில் விரைவில் பெண்கள் பாதுகாப்பு பிரிவு
  • பெண்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் / புகார்களைக் கையாள ஒரு பிரத்யேக மாநில அளவிலான பெண்கள் பாதுகாப்பு பிரிவு விரைவில் அமைக்கப்படும் என்று உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் எம்.சுச்சரிதா தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு ஒரு மூத்த அதிகாரியின் தலைமையில் இருக்கும், துன்புறுத்தல், ஈவ் டீசிங், வரதட்சணை வழக்குகள் மற்றும் சிறார்கள் தொலைந்த வழக்குகள் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். கட்டணமில்லா டோல் ப்ரீஎண்ணும் இந்தப் பிரிவுக்கு ஒதுக்கப்பட உள்ளது.

கேரளா

இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் பயணப் படகு டிசம்பரில் இயக்கபட உள்ளது
  • டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் முதன்மையான சூரிய சக்தியில் இயங்கும் கப்பல் ஆதித்யாவை அறிமுகப்படுத்த கேரளா அரசு தயாராகி வருகிறது.ரூ. 3 கோடி செலவில்100 பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடிய   பயண படகு அரூரில் உள்ள ஒரு படகு கடும் தளத்தில் கட்டுமானத்தில் உள்ளது. இது கலப்பினக் கப்பல் சோலார் பேனல்கள், பேட்டரி மற்றும் ஜெனரேட்டரிலிருந்து ஆற்றலைப் பெறக்கூடிய ஒரு மோட்டார் மூலம் இயக்கப்படும்.

தெலுங்கானா

தெலுங்கானாவில் ஆசியாவின் மிகப்பெரிய திறந்த, வானம் பார்த்த  குளம்

  • காலேஸ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தின் (கே.எல்.ஐ.பி) ஒரு பகுதியாக, “ஆசியாவின் மிகப்பெரிய திறந்த,வானம் பார்த்த குளம் ” இல்லந்தகுந்தா மண்டலத்தில் உள்ள திப்பப்பூர் கிராமத்தில் கட்டப்பட்டது. 92 மீ ஆழம் மற்றும் 56 மீ விட்டம் கொண்ட, குளம் ஒரு டி.எம்.சி அடி நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்டது மற்றும் மோட்டார்கள் மூலம் சித்திப்பேட்டையில் உள்ள அனந்தகிரி நீர்த்தேக்கத்திற்கும் பின்னர் மல்லன்னசாகர் திட்டத்திற்கும் தண்ணீர் அனுப்புவதற்காக கட்டப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு  மெக்ஸிகோ  ஒப்புதல் அளித்தது.
  • அமெரிக்க-மெக்ஸிகோ-கனடா ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ  ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவுடனான  சமீபத்திய பதட்டங்கள் இருந்தபோதிலும் புதிய வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திற்கு மெக்ஸிகோ இறுதி ஒப்புதல் அளித்த முதல் நாடாகும். மெக்ஸிகன் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ஒரு திறந்த பொருளாதாரத்திற்கு ஆதரவாக மற்றும் அந்த பகுதியில் பொருளாதார ஒருங்கிணைப்பை இன்னும் மேம்படுத்துவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளது .
  • மெக்ஸிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் இந்த ஒப்பந்தம் மெக்ஸிகோவில் அதிக வெளிநாட்டு முதலீடு மற்றும் வேலைகளை கொண்டு வரும் என்றும், அமெரிக்க சந்தைகளை அணுக உதவும் என்றும் கூறினார். இந்த ஒப்பந்தம் வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (நாஃப்டா) மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது கடந்த 25 ஆண்டுகளில் மெக்சிகோவை ஏற்றுமதி செய்யும் அதிகார மையமாக மாற்ற உதவியது.

பாதுகாப்பு செய்திகள்

பி -75 (I) க்கான மூலோபாய கூட்டு பங்காளர்களை  பட்டியலிடுவதற்காண EOI ஐ இந்திய அரசு வெளியிடுகிறது
  • மேக் இன் இந்தியா திட்டத்தின் முக்கிய முயற்சியாக, இந்திய கடற்படையின் பி -75 (I) திட்டத்திற்கான ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களை நிர்மாணிப்பதற்கான இந்திய மூலோபாய பங்காளர்களை பட்டியலிடுவதற்கான EOI ஐ இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இத்திட்டன் செலவு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இது சமீபத்திய மூலோபாய கூட்டு பங்காளர் கீழ் மேற்கொள்ளப்படும் இரண்டாவது திட்டமாகும், முதலாவது திட்டத்தின் மூலம் 111 கடற்படை பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் வாங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கப்பல்களின் பாதுகாப்புக்காக கடற்படை வளைகுடாவில் நடவடிக்கை தொடக்கம்
  • கடல்சார் பாதுகாப்பு சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியக் கொடியை உடைய கப்பல்கள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா வழியாக இயங்குவதை  அல்லது கடப்பதை மீண்டும் உறுதி செய்வதற்காக இந்திய கடற்படை ஓமான் வளைகுடாவில் ஐ.என்.எஸ் சென்னை மற்றும் ஐ.என்.எஸ் சுனைனா கப்பல்களை அனுப்பியுள்ளது.

விருதுகள்

யோகா 2019 இன் ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான  சிறந்த பங்களிப்பிற்கான விருதுகள்
  • யோகா ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பிற்கு 2019 க்கான பிரதமரின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தின் லைஃப் மிஷனின் சுவாமி ராஜர்ஷி முனி, இத்தாலியில் உள்ள திருமதி அன்டோனியெட்டா ரோஸி, பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா, முங்கர் மற்றும் ஜப்பான் யோகா நிகேதன் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் . யோகா ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சிறந்த பங்களிப்பிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 2022ல்  பெண்கள் கிரிக்கெட் அணி
  • பெண்கள் கிரிக்கெட் அணி பர்மிங்காம் காமன்வெல்த் போட்டிகளின் ஒரு பகுதியாக சேர்க்கப்படவுள்ளது , ஏனெனில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு சிஜிஎஃப் 2022 பதிப்பில் அதை சேர்க்க பரிந்துரைத்தது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (சிஜிஎஃப்) நிர்வாக சபைக் கூட்டத்தில் இந்த பரிந்துரை செய்யப்பட்டது. கிரிக்கெட் முன்பு காமன்வெல்த் போட்டியில் ஒரு முறை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது , இதில் 1998 இல் கோலாலம்பூரில் ஆண்கள் அணி விளையாடியது.
58 வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பு
  • ஆசிய வெள்ளிப் பதக்கம் வென்ற அன்னு ராணி, செக் குடியரசில் நடந்த ஐ.ஏ.ஏ.எஃப் உலக சவால் நிகழ்வான 58 வது ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் தடகள சந்திப்பில் 60 மீட்டர் ஈட்டி எறிதலில் வெண்கலத்தை வென்றார்.
ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் 2019
  • ஆசிய ஜூனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 23 பேரை கொண்ட அணியை இந்தியா அறிவித்துள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20 ஆம் தேதி முதல் சீனாவில் உள்ள சுசோவில் நடைபெறவுள்ளது.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 21, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!