நடப்பு நிகழ்வுகள் ஜூன் – 20, 2019
முக்கியமான நாட்கள்
ஜூன் 20 – உலக அகதிகள் தினம்
- ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) உலக அகதிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. துன்புறுத்தல், மோதல் மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களின் கட்டாயத்தின் கீழ் தாய்நாட்டை விட்டு வெளியேறிய பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளின் தைரியம், வலிமை மற்றும் உறுதியை மதிப்பதற்காக இந்த நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.
- 2019 தீம்: # StepWithRefugees — Take A Step on World Refugee Day
ஜூன் 20 – உலக உற்பத்தித்திறன் நாள்
- ஜூன் 20 உலக உற்பத்தித்திறன் நாளில் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் உற்பத்தித்திறனைக் கொண்டாடுகிறார்கள் .இந்த நாள், எல்லா இடங்களிலும் உள்ள மக்களை அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க ஊக்குவிக்கிறது. உற்பத்தித்திறன் தொடர்பான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும்.உலக உற்பத்தித்திறன் தினத்தின் நோக்கம், சிறந்த வாழ்க்கையை நடத்துவதற்கு உற்பத்தித்திறன் எவ்வாறு முக்கியமானது என்பதை மக்களுக்கு நினைவூட்டுவதாகும்.
தேசிய செய்திகள்
டிடி இந்தியா நிகழ்ச்சிகள் வங்கதேசம், தென் கொரியாவில் ஒளிபரப்பப்பட உள்ளது
- வங்கதேச டி.வி.க்கு சொந்தமான பி.டி.வி வேர்ல்ட் என்ற சேனலை தூர்தர்ஷன் ஃப்ரீ டிஷ்ஷில் வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இதன் மூலம் நம் நாட்டின் தூர்தர்ஷன் பார்வையாளர்கள் வங்கதேசத்தின் பி.டி.வி வேர்ல்ட் சேனலை காண முடியும். அதே நேரத்தில், டி.டி இந்தியா சேனல் வங்கதேசத்தில் உள்ள மக்களால் பார்க்கும் படி அந்நாட்டில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த ஏற்பாடு மே 7 ஆம் தேதி பிரசார் பாரதி மற்றும் வங்கதேச தொலைக்காட்சி (பிடிவி) இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாகும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜம்மு மற்றும் காஷ்மீர் அரசு 18 அம்ரித்[AMRIT] கடைகள் திறக்க முடிவு
- ஜம்மு-காஷ்மீர் அரசு அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவமனைகளிலும், மாநிலத்தின் முக்கிய மருத்துவமனைகளிலும் 18 அம்ரித்[AMRIT] (சிகிச்சைக்கான மலிவு மற்றும் நம்பகமான மருந்துகள்) கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது. இறுதி பயனர்களுக்கு தரமான மற்றும் மலிவு மருந்துகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும்.
தமிழ்நாடு
பார் கவுன்சில் ஆன்லைன் சேர்க்கையை கைக்கொண்டது
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பார் கவுன்சிலில் வக்கீல்கள் ஆன்லைனில் பதிவு செய்ய மற்றும் காவல்துறை மூலம் அவர்களின் தகவல்களை ஆன்லைனில் சரிபார்ப்பதற்கான பார் கவுன்சில் ஆன்லைன் பதிவை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில்ரமணி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
சர்வதேச செய்திகள்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தன்னார்வ கருணைகொலை சட்டப்பூர்வமானது
- ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
- கருணைககொலைச் சட்டங்களை இயற்றிய முதல் மாகாணமாக விக்டோரியா மாறியுள்ளது. இது தாங்கமுடியாத வலியால் பாதிக்கப்பட்டுள்ள நோயுற்ற நோயாளிகளுக்கு தங்கள் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவர ஆபத்தான மருந்துகளை சட்டப்பூர்வமாக தங்கள் மருத்துவரிடம் கேட்க அனுமதிக்கும்.
ஆசியா–பசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் பங்களாதேஷ் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்தது
- ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) படி ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் 45 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக பங்களாதேஷ் உருவெடுத்துள்ளது. 2018-19 நிதியாண்டில் பங்களாதேஷ்9% வளர்ச்சி அடைந்துள்ளது, இது 1974 முதல் அதன் வேகமான வீதமாகும். அடுத்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 8% ஆக இருக்கும் என்று வங்கி கணித்துள்ளது.
வணிக செய்திகள்
இந்தியா ஸ்மார்ட்போன் மூலம் அதிக தரவு பயன்பாட்டை கொண்டுள்ளது
- இந்தியா ஸ்மார்ட்போன் மூலம் அதிக சராசரி தரவு பயன்பாட்டைக் கொண்டுள்ளது, இது 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதம் வரை 9.8 ஜிபியை எட்டியுள்ளது என்று ஸ்வீடிஷ் தொலைதொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளர் எரிக்சன் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இது 2024 க்குள் ஒரு மாதத்திற்கு ஒரு ஸ்மார்ட்போனின் மூலம் மாதம் 18ஜிபியாக உயரும் என்று கணித்துள்ளனர்.
மாநாடுகள்
நான்காவது தேசிய யோகா ஒலிம்பியாட் பதிப்பு
- தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஏற்பாடு செய்துள்ள பள்ளி குழந்தைகளின் மூன்று நாள் தேசிய யோகா ஒலிம்பியாட் புதுதில்லியில் உள்ள சாச்சா நேரு பவனில் நடைபெறுகிறது. ஒலிம்பியாட் இயக்குனரும் இந்தியாவின் யுனெஸ்கோ பிரதிநிதியுமான திரு எரிக் பால்ட் அவர்களால் என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் பேராசிரியர் ஹிருஷிகேஷ் சேனாபதி முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது. இது நான்காவது தேசிய யோகா ஒலிம்பியாட் பதிப்பு ஆகும். இது முதன்முதலில் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் 20 வது கூட்டம்
- நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சிலின் (எஃப்.எஸ்.டி.சி) 20 வது கூட்டம் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட்துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமையில் புது தில்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தற்போதைய உலகளாவிய மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலைமை மற்றும் நிதி மற்றும் ஸ்திரத்தன்மை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வங்கி மற்றும் என்.பி.எஃப்.சி பற்றிய மதிப்பாய்வும் மேற்கொள்ளப்படுகிறது
திருட்டு தொடர்பான பிரச்சினைகள் குறித்த சர்வதேச ஒர்க்ஷாப் (International Workshop)
- திருட்டு மற்றும் ஆயுதக் கொள்ளை தொடர்பான பிரச்சினைகள் குறித்த இரண்டு நாள் சர்வதேச ஒர்க்ஷாப் (International Workshop) புதுடில்லியில் துவக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் உள்ள கப்பல்களுக்கு எதிரான திருட்டு மற்றும் ஆயுதக் கொள்ளைகளை எதிர்ப்பதற்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஒத்துழைப்புடன் இந்திய கடலோர காவல்படையால் இந்த சர்வதேச ஒர்க்ஷாப் (International Workshop) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது (ReCAAP). தற்போது, 20 நாடுகள் RECAAP இல் உறுப்பினர்களாக உள்ளனர். சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரப் படையின் (Diplomatic Corps) உறுப்பினர்கள் இந்த ஒர்க்ஷாப்பில் கலந்து கொள்கின்றனர். சர்வதேச சட்டங்கள், வழக்கு விசாரணை செயல்முறை, தடயவியல் மற்றும் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் போன்ற திருட்டு மற்றும் ஆயுதக் கொள்ளை தொடர்பான பிரச்சினைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் & அமைச்சரவை ஒப்புதல்
சூரிய / காற்றாலைத் துறைக்கான சர்ச்சைத் தீர்க்கும் வழிமுறைக்கு ஸ்ரீ ஆர்.கே.சிங் ஒப்புதல் அளித்தார்
- சூரிய மற்றும் காற்றாலை எரிசக்தி திட்டங்களை எளிதாக்கும் ஒரு முக்கிய முடிவில், மத்திய மின் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (ஐ.சி) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங் சர்ச்சைத் தீர்க்கும் குழுவை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.சூரிய / காற்றாலை ஆற்றல் உருவாக்குநர்களுக்கும் SECI / NTPC க்கும் இடையில் எதிர்பாராத மோதல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ஜி.எம்.சி ஜம்முவில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது:
- மாநிலத்தில் மூன்றாம் நிலை புற்றுநோய் சேவைகளை வலுப்படுத்துவதற்காக ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரியில் 120 கோடி ரூபாய் புற்றுநோய் நிறுவனத்திற்கு இந்திய அரசின், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் முறையாக ஒப்புதல் அளித்துள்ளது.
தரவரிசை மற்றும் குறியீடுகள்
QS உலக பல்கலைக்கழக தரவரிசை
- வெளியிடப்பட்ட QS உலக பல்கலைக்கழகம் தரவரிசையில் சிறந்த உலகளாவிய பல்கலைக்கழகங்களில் இருபத்தி மூன்று இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், ஐ.ஐ.டி பம்பாய் இந்தியாவின் சிறந்த நிறுவனமாக உள்ளது, இது 152 வது இடத்தைப் பிடித்ததுள்ளது. ஐ.ஐ.டி டெல்லி மற்றும் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவை முதல் 200 இடங்களில் இடம் பெற்றுள்ளன.
PDF Download
நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 20, 2019 video – Click Here
2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
To Follow Channel –கிளிக் செய்யவும்
Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Group -ல் சேர – கிளிக் செய்யவும்