நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 03, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஏப்ரல் 03, 2019

தேசிய நிகழ்வுகள்

உலகளாவிய காற்று ஆய்வு 2019 (SOGA2019) 

 • 2017 ம் ஆண்டில் காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் 1.2 மில்லியனுக்கும் மேலான இறப்புக்கள் நிகழ்ந்திருப்பதாக சுகாதார வெளியீடு நிறுவனம் (HEI) வெளியிட்ட உலகளாவிய காற்று ஆய்வு 2019 (SOGA2019)  குறிப்பிட்டுள்ளது.
 • இந்தியாவில் அனைத்து சுகாதார அபாயங்களிலும் நிகழும் மரணங்களில் மூன்றாவது மிகப்பெரிய காரணி காற்று மாசுபாடு ஆகும்.

தமிழ்நாடு

தமிழக லோகாயுக்தாவின் தலைவர் – ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ்

 • ஆளுநர் ஐந்து உறுப்பினர் லோகாயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ் அவர்களை நியமித்துள்ளார்.
 • முன்னாள் மாவட்ட நீதிபதிகளான கே.ஜெயபாலன் மற்றும் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நீதித்துறை உறுப்பினர்களாகவும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ராஜரம் மற்றும் வழக்கறிஞர் கே. ஆறுமுகம் ஆகியோர் ஊழல் எதிர்ப்புக் குழுவின் நீதித்துறை அல்லாத உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா

கேரளாவில் இரண்டு புதிய தாவர இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 • கோழிக்கோட்டு புவியியல் துறை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இடுக்கியின் மதிக்கேட்டான் ஷோலா காடுகளின் (உயரமான பசுமையான காடு) எல்லையில் இருக்கும் ஷோலா தேசியப் பூங்காவில் மெமிசிலோன் இடுக்கியனம் (Memecylon idukkianum) எனப்படும் இரண்டு புதிய அயன்வுட் தாவர இனங்களை கண்டுபிடித்துள்ளனர்.

 சர்வதேச நிகழ்வுகள்:

சிகாகோ மேயரானார் கருப்பு இன பெண்

 • முன்னாள் மத்திய வழக்கறிஞரான லோரி லைட்ஃபுட் (Lori Lightfoot) அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவுக்கு மேயரானார். ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க பெண், சிகாகோ மேயராக தேர்ந்தெடுக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதலமுறையாகும்.

அறிவியல் மற்றும் விஞ்ஞானம்

ISRO வரும்காலங்களில் அனுப்பும் செயற்கைகோள்களின்  பட்டியல்

 • 2019 மே மாதம் முதல் 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாத வரையிலான காலகட்டத்தில் ‘பாதுகாப்பு’ செயற்கைக்கோள்களை அனுப்ப ISRO திட்டமிட்டுள்ளது.
செயற்கைகோள் பெயர் அனுப்பும் காலம்
RISAT-2B மே – 2019
Cartosat-3 ஜூன் – 2019
RISAT-2BR1 ஜூலை – 2019
GISAT -1 (New Series) செப்டம்பர் – 2019
RISAT-2BR2 அக்டோபர் – 2019
GISAT-2  நவம்பர் – 2019
RISAT-1A  நவம்பர் – 2019
GSAT-32  பிப்ரவரி – 2020

அறிவியல் கண்டுபிடிப்பு

பாக்டீரியா செல் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நொதி கண்டுபிடிப்பு

 • செல்லுலார் & மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) விஞ்ஞானிகள் பாக்டீரியாவின் செல் சுவர்களை உடைக்க பயன்படும் ஒரு புதிய நொதியை கண்டுபிடித்துள்ளனர்.
 • இது நோய்எதிர்ப்பு மருந்துகள் மூலமாக பாக்டீரியா செல்சுவர் எதிர்ப்பு மருந்தை செலுத்தும் ஒரு புதிய வழியை வழங்குகிறது.

வணிகம் & பொருளாதாரம்:

ரேமண்ட் ரியால்டி ரியல் எஸ்டேட் வணிகம்

 • ஜவுளி துறையில் முக்கிய பங்குவகிக்கும் ரேமண்ட் குழுமம், ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட முடிவு செய்துள்ளது. அதன் தானேயில் (Thane) உள்ள நிலத்தை வளர்ப்பதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் 3,500 கோடி ரூபாய்க்கு வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது.
 • ரேமண்ட் குழுமம் தனது புதிய பிரிவை ரேமண்ட் ரியால்டி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் துறைக்காக அமைத்துள்ளது.

ஒப்பந்தங்கள்

மலாவியில் IAIARD அமைப்பதற்கு இந்தியா NABCONS உடன் ஒப்பந்தம்

 • மலாவிவில் இந்தியா-ஆபிரிக்க வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனம் (IAIARD) அமைப்பதற்கு வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி கழக (NABCONS) தேசிய வங்கியுடன் இந்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

பாதுகாப்பு நிகழ்வுகள்

இந்தியாவிற்கு 24 MH-60R பல்-பணி ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்கா முடிவு

 • இந்தியாவின் வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 24 MH-60R பல்-பணி ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்க முடிவு. இதன் மதிப்பு $ 2.6 பில்லியன் ஆகும்.

இலங்கை கடற்படை துணை அட்மிரல் இந்திய பயணம் மேற்கொண்டுள்ளார்

 • தொழில்முறை பயணமாக இலங்கை கடற்படையின் தளபதியான துணை அட்மிரல் பியால் டி சில்வா 30 மார்ச் முதல் 02 ஏப்ரல் வரையிலான இந்திய பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

 விளையாட்டு நிகழ்வுகள்

உலக கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்து அணிக்கு ODI போட்டியே விளையாடாத விக்கெட் கீப்பர் வீரர் தேர்வு

 • டிம் பிளண்டெல், 28 வயதான வெலிங்டன் விக்கெட் கீப்பர், அவரது முதல் டெஸ்ட் அறிமுக போட்டியில் சதமடித்தார், ஆனால் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பெங்குபெற்றதில்லை, இருப்பினும் உலகக் கோப்பைக்கான நியூசிலாந்தின் அணியில் 15 வீரர்களில் ஒருவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
 • 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்ட முதல் நாடு நியூசிலாந்து ஆகும்.
ஏப்ரல் 3 நடப்பு நிகழ்வுகள் video – கிளிக் செய்யவும்

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!