நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2023

0
நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2023
நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2023

நடப்பு நிகழ்வுகள் – 29 ஏப்ரல் 2023

தேசிய செய்திகள்

பண்ணை இயந்திர தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாடு-2023 தொடங்கப்பட்டது.
 • இந்த மாநாட்டின் அறிவிப்பின் படி, மாநில அரசுகள் மூலம் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், தானியங்கி இயந்திரங்கள் உள்ளிட்ட 15 லட்சத்து 24 ஆயிரம் விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
 • நாட்டில் உள்ள 85 சதவீத சிறு விவசாயிகள் தொழில்நுட்பம் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்த இந்தத் திட்டம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. 2014-15 முதல் 2022-23 வரை மாநிலங்களுக்கு பயிற்சி, சோதனை, CHCகள், ஹைடெக் ஹப்கள் மற்றும் பண்ணை இயந்திரங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்காக 6 ஆயிரத்து 120 கோடியே 85 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்று மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
கோதுமை கொள்முதலில் முதல் மூன்று மாநிலங்களின் பங்களிப்பு பட்டியல்.
 • கொள்முதலில் முக்கிய பங்களிப்பு வகிக்கும் பஞ்சாப், ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து கோதுமை முறையே 89.79 LMT, 54.26 LMT மற்றும் 49.47 LMT கொள்முதல் செய்யப்படுகிறது என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
 • கிராம பஞ்சாயத்து அளவில் கொள்முதல் மையங்களைத் திறக்கவும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கொள்முதலுடன் கூட்டுறவு சங்கங்கள், கிராம பஞ்சாயத்துகள்போன்றவற்றின் மூலம் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.
இணைய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ராணுவம்  திட்டமிட்டுள்ளது
 • ராணுவத் தளபதிகள் மாநாடானது ஆண்டுதோறும் ஏப்ரல், அக்டோபா் மாதங்களில் நடைபெறும். அதன்படி, கடந்த 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை மாநாடு நடைபெற்றது.
 • இம்மாநாட்டில் இணையவழி தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலமாக நவீன ரக ட்ரோன்கள், ட்ரோன்களை எதிர்த்துத் தாக்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ராணுவத்தில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வானொலி இணைப்பை அதிகரிக்க 18 மாநிலங்கள் மற்றும் 2யூனியன் பிரதேசங்களில் 91 ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
 • தகவல்களை சரியான நேரத்தில் பரப்புவது, விவசாயத்திற்கான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை புதிய சந்தைகளுடன் இணைக்கும்  ஆகிய ஆகச்சிறந்த  பணிகளில் ஈடுபடுவதில் இந்த வானொலி டிரான்ஸ்மிட்டர்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
 • அகில இந்திய வானொலி தேசத்தை இணைக்கும் ஒரூ பாலமாக செயல்படுகிறதென்றும் தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலை நோக்கி எங்கள் அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வரும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தின் முதன்மையான ரூதர்ஃபோர்ட் ஆப்பிள்டன் ஆய்வகத்தில் வசதியை மேம்படுத்துவதில் இந்தியா-பிரிட்டன் அரசாங்கம் ஒத்துழைப்பு
 • ரூதர்போர்ட் ஆராய்ச்சியகம்(RAL) என்பது இங்கிலாந்தில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் கவுன்சிலால் (STFC) இயக்கப்படும் தேசிய அறிவியல் ஆய்வுக்கூடங்களில் ஒன்றாகும்.
 • இந்தியாபிரிட்டன் நியூட்ரான் சிதறல் பட்டறையை ஏற்பாடு செய்வதற்கான நிதியுதவி, திட்டத்தின் முதல் ஆண்டிலிருந்து தொடங்குமென்றும் இதில் இந்தியா மற்றும் பிரிட்டன் இணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎஸ்டி), நானோ மிஷனின் கீழ் ஒரு பெரிய கூட்டுத் திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நியூட்ரான் பற்றிய ஆராய்ச்சியை இது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

இந்தோ-இங்கிலாந்தின் அஜெயா வாரியர்-23 பயிற்சியானது தொடங்கியது.
 • இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும்  இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியானஅஜெயா வாரியர்-23” –ன் 7வது பயிற்சியானது இங்கிலாந்தின்  சாலிஸ்பரி சமவெளியில் ஏப்ரல் 27 முதல் மே 17வரை நடத்தப்படுகிறது
 • பட்டாலியன் மட்டத்தில் கட்டளை இடுகை பயிற்சியளித்தல் (CPX) மற்றும் நிறுவன அளவிலான களப் பயிற்சியளித்தல் (FTX) ஆகியவற்றை மேம்படுத்துவது இந்த பயிற்சியின் நோக்கமாகும்.
பாகிஸ்தானில் நடைபெற்ற நம்பிக்கை இல்லா  வாக்கெடுப்பில் ஷெபாஸ் ஷெரிப் வெற்றி பெற்றார்
 • பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் க்கு நேற்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அவரது வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ தாக்கல் செய்த காரணத்தினால் நம்பிக்கை வாக்கெடுப்பு  நடத்தப்பட்டது.
 • இந்த வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக மொத்தம்  336 வாக்குகளில் 180 வாக்குகளை ஷெரிப் பெற்றார். நாடாளுமன்றத்தின் தனிப்பெரும்பான்மையைப் பெற 172 வாக்குகள் வாங்கவேண்டிய நிலையில், ஷெரீப் 180 வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 • இதில் ஏப்ரல் 2022 அன்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோற்று பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில செய்திகள்

ஜார்கண்ட் மாநிலமானது “முதல் ஏர் ஆம்புலன்ஸ்” சேவையை தொடங்கியுள்ளது.
 • இந்த ஆம்புலன்ஸ் சேவையானது ராஞ்சி மற்றும் பிற 6 நகரங்களில் இருந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
 • எந்த மாவட்டத்திலிருந்தும் மக்களை அழைத்துச் செல்ல ராஞ்சியில் குறைந்தபட்சம் ஒரு ஏர் ஆம்புலன்ஸ் நிலையாக இருப்பதை உறுதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

தூதரகம்(REIT) – நிர்வாக இயக்குனராக(CEO) அரவிந்த் மையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 • விகாஷ் கத்லோயாவிற்குப் பதிலாக, மையாஇந்த பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதி வரை விகாஷ் கத்லோயா REIT இன் மூத்த ஆலோசகராகப் பொறுப்பேற்பார் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • இதற்கு முன்பு அரவிந்த் மையா தலைமை நிதி அதிகாரியாக(CFO) தூதரகத்தில் பணியாற்றினார்.

விளையாட்டு செய்திகள்

2023 ஆசிய U18 தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது
 • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் 2023 ஆசிய U18 தடகள சாம்பியன்ஷிப்பின் முதல் நாளில் இந்தியா மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றுள்ளது, ஆண்களுக்கான 1500மீ ஓட்டத்தில் 3:57.37 வினாடிகளில் கடந்து பிரியன்ஷு தங்கம் வென்றார்.
 • ஆண்களுக்கான 1500 மீ ஓட்டத்தில் 3:59.43 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கம் வென்றார் சக இந்திய வீரரான ராகுல் சர்னாலியா.

முக்கிய தினம்

வேலையில் பாதுகாப்பு வழங்குதல் மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் இன்று.
 • உலகளவில் பாதுகாப்பானமற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை  உருவாக்குவதும் அதன் சமநிலையை ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 28 ஆம் தேதி பணி பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினமாகக் கொண்டாடப்படுகிறது.
 • பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழல் ஒரு அடிப்படைக் கொள்கை மற்றும் வேலையில் சரியானதுஎன்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாகும்.
Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!