நடப்பு நிகழ்வுகள் – 26 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 26 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 26 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 26 மே 2023

தேசிய செய்திகள்

இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதற்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது “RCS- உடான்” இன் 5.1 பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைப்பை மேம்படுத்தவும், ஹெலிகாப்டர்கள் மூலம் நாட்டின் கடைசி மைல் இணைப்பை அடையவும், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது, பிராந்திய இணைப்புத் திட்டத்தின் (RCS)-UDAN(Ude Desh Ka Aam Nagrik) 5.1 ஆவது பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • UDAN 5.1 திட்டமானது சிவில் விமானப் போக்குவரத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவின் தொலைதூர மற்றும் சேவை வழங்கப்படாத பகுதிகளுக்கும் ஒரு புதிய வழிமுறைகளை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவல் அவர்களால் PCIM&H ‘இ-அலுவலகம்’ மற்றும் இணைய வலைத்தளத்தை திறந்து வைத்துள்ளார்.
 • மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனோவல் அவர்களால், “இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான பார்மகோபோயா அமைப்பின்” (PCIM&H), காசியாபாத் பிரிவில், “பிசிஐஎம்&எச்” மற்றும் “இணையதளம்”  ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளார். 
 • இந்த வலைத்தளமானது “மருந்தியல் மோனோகிராஃப்களின் வலைதள பாதிப்புகளை விற்பதற்கானது” என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

“ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா” பட்டியலில் கேரளாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் ஒன்று இடம்பெற்றுள்ளது.
 • கேரளாவைச் சேர்ந்த ஜென்ரோபோட்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உரிமையாளர்கள் “தொழில், உற்பத்தி மற்றும் எரிசக்தி பிரிவின் கீழ்” ‘ஃபோர்ப்ஸ் 30 அண்டர் 30 ஆசியா’ பட்டியலில் இடம்பெற்று இந்தியாவின் திறனை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளனர்.
 • இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான  29 வயதான நிகில் என்பி, 28 வயதான விமல் கோவிந்த் எம்கே, 28 வயதான ரஷித் கரிம்பனக்கல் மற்றும் இருவர் இதில் அடங்குவர். இந்த ஸ்டார்ட்அப், தடைபட்ட சாக்கடைகளை சுத்தம் செய்வதில் மனித வேலைக்கு பதிலாக “பாண்டிகூட்” என்ற ரோபோவை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.

சர்வதேச செய்திகள்

மிகவும் துன்பகரமான நாடு தரவரிசை பட்டியலில் ஜிம்பாப்வே நாட்டிற்கு முதலிடம்.
 • சமீபத்தில் வெளியிடப்பட்ட ஹான்கேயின் வருடாந்திர துயரக் குறியீடு (HAMI) 2022 இல் ‘மிகவும் துன்பகரமான நாடு’ என்று ஜிம்பாப்வே தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.ஜிம்பாப்வே நாட்டின் ஆட்சி சரியாக அமையவில்லை என்றும், முந்தைய ஆண்டில் 243.8 சதவீத பணவீக்க விகிதத்தை எட்டி பெரும் பொருளாதார சரிவில் மூழ்கியதும் இதற்கு காரணம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • இந்த பட்டியலில் இந்தியா 103வது இடத்தில் உள்ளது. இதற்கான காரணம் வேலையில்லாத் திண்டாட்டம் என கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து மிகக் குறைவான துன்பகரமான நாடாக உருவெடுத்து, பட்டியலில் முதலிடத்தை (157) பிடித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் புதுமையான நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் முதலில் உள்ளது.
 • பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் (BCG) ஆண்டு அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் புதுமையான நிறுவனம் பட்டியலில் ஆப்பிள் நிறுவனமானது  முதலிடத்தில் உள்ளது. 
 • ஆப்பிளைத் தொடர்ந்து டெஸ்லா, அமேசான், ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், மாடர்னா, சாம்சங், ஹுவாய் ஆகியவை அடுத்தடுத்த நிறுவனங்களில் உள்ளன. 20 வது இடத்தில் உள்ள டாடா குழுமமானது, பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே “இந்திய நிறுவனம்” ஆகும்.

மாநில செய்திகள்

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது தொடக்கம்.
 • உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மற்றும் டெல்லி இடையே ஓடும் அரை அதிவேக ரயில் இந்தியாவின் 17வது வந்தே பாரத் ரயில் மற்றும் உத்தரகாண்டின் முதல் ரயில் ஆகும்.
 • கவாச் தொழில்நுட்பம் உட்பட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்ட இந்த ரயிலானது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

சண்டிகரின் “கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையானது 2023ஆம் ஆண்டுக்கான “ஸ்காட்ச் வெள்ளி விருதை” வென்றுள்ளது.
 • சண்டிகரில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறையானது, சிகிச்சையளிக்கப்பட்ட விலங்குகளின் மருத்துவப் பதிவுகளை கணினிமயமாக்கியதன் மின் ஆளுமைக்கான 2023ஆம் ஆண்டுக்கான ஸ்காட்ச் சில்வர் விருதை பெற்றுள்ளது. இந்த திட்டம் புதுமையானது மற்றும் நாட்டிலேயே முதல் முறையாகும்.
 • கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை செயற்கை கருவூட்டல் மற்றும் சிகிச்சை, தடுப்பூசி போன்ற பிற சேவைகளுக்காக ஆன்லைனில் பதிவு செய்ய வசதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

நிதி ஆயோக் மாதிரியில் அருணாச்சலத்தின் மாற்றத்திற்கான நிறுவனம் (ITA) அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 • அருணாச்சல பிரதேச அரசானது, மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல NITI ஆயோக்குடன் இணைந்து அருணாச்சல பிரதேசத்தை மாற்றும் நிறுவனத்தை (ITA) அமைக்கும் என அம்மாநில முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.
 • மேலும் இந்த அமைப்பானது கற்றலின் அறிவுத் தளத்திற்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் எனவும் இது அருணாச்சல பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாய் அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கும் தமிழக அரசுக்கும் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
 • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் சிங்கப்பூர் வர்த்தக துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோரின் முன்னிலையில் சிங்கப்பூரின் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
 • இதில் ஹை-பி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் வழிகாட்டுதல்களுடன்  தமிழ்நாடானது “மின்னணு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் புதிய வகை மரமானது ஆராய்ச்சியாளர்களால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
 • அருணாச்சல பிரதேசத்தில் புதிய மர இனத்தின் கண்டுபிடிப்பானது “எடின்பர்க் ஜர்னல் ஆஃப் தாவரவியலின்” மே 19 பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
 • “அருணாச்சல பிரதேசத்தின் ஆதி மலைகளுக்கு” பல்லுயிர் பெருக்கத்தை ஆராயும்போது ஆராய்ச்சியாளர்களால் “மீயோஜின் அருணாசலென்சிஸ்” என்று பெயரிடப்பட்ட இந்த புதிய வகையான மர இனமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது இந்தியாவின் மூன்றாவது, கிழக்கு இமயமலை மற்றும் வடகிழக்கு இந்தியாவின் முதல் இனமாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தை ஜார்க்கண்டில் ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைத்துள்ளார்.
 • ஜார்கண்டின் ராஞ்சியில் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய “ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற கட்டிடத்தை” ஜனாதிபதி திரௌபதி முர்மு மே 24 அன்று திறந்து வைத்துள்ளார். இது நாட்டின் மிகப்பெரிய நீதிமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 
 • இந்த புதிய உயர் நீதிமன்றத்தின் 165 ஏக்கர் வளாகமானது பரப்பளவில் நாட்டிலேயே மிகப்பெரிய நீதிமன்றம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.

 நியமனங்கள்

IAMAI தலைவராக “ஹர்ஷ் ஜெயின்” நியமனம்.
 • ட்ரீம் ஸ்போர்ட்ஸின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹர்ஷ் ஜெயின், இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தின் (IAMAI) தலைவராகத் 2023 முதல் 2025 வரை செயல்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
 • .கூகுள் இந்தியாவின் துணைத் தலைவராக இருந்த சஞ்சய் குப்தாவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வேதாந்தா – ஃபாக்ஸ்கான் இந்திய உற்பத்தியை அதிகரிக்க மற்றும் மேற்பார்வையிட மைக் யங்-ஐ  நியமனம் செய்துள்ளது. 
 • வேதாந்தா – ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர்ஸ் லிமிடெட் திட்ட மேலாண்மை அலுவலகம் மற்றும் உற்பத்தி செயல்பாடுகளின் மூத்த துணைத் தலைவராக மைக் யங்கை அந்நிறுவனம் நியமித்துள்ளது. இவர் இந்தியாவின் சிப் உற்பத்தியை மேற்பார்வையிடுவார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 • முன்னதாக இவர் சிலிக்கான் உற்பத்தியை தளமாக கொண்ட சிங்கப்பூரின் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விளையாட்டு செய்திகள்

கிரீஸில் நடைபெற்ற சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம்.
 • மே 24, 2023 கிரீஸில் உள்ள கலிதியாவில் நடைப்பெற்ற சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் நீளம் தாண்டுதல் வீரர்களான “முரளி ஸ்ரீசங்கர் தங்கமும் மற்றும் ஜெஸ்வின் ஆல்ட்ரின் வெள்ளியும்” வென்றுள்ளனர்.
 • ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தனது பட்டத்தை வெற்றிகரமாக பாதுக்காக்க, ஸ்ரீசங்கர் இந்த போட்டியில் சிறந்த 8.18 மீட்டர் பாய்ச்சலைப் பதிவு செய்து தங்கத்தை வென்றுள்ளார். 

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!