நடப்பு நிகழ்வுகள் – 21 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 21 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 21 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 21 மே 2023

தேசிய செய்திகள்

‘இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள்’ என்ற சர்வதேச மாநாட்டை மருந்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது.
  • மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, மே 26 அன்று புதுதில்லியில் ‘இந்திய மருந்து மற்றும் இந்திய மருத்துவ சாதனங்கள் 2023’ என்ற சர்வதேச மாநாட்டின் 8-வது பதிப்பை தொடங்கி வைக்க உள்ளார்.
  • “பொது வசதிகளுக்கான மருத்துவ சாதனக் குழுக்களுக்கு உதவி” (AMD-CF) என்ற புதிய திட்டமனது இந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மருத்துவ சாதனக் குழுக்களில் பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல் மற்றும் மருத்துவ சாதனங்களுக்கான பரிசோதனை வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

பசுமை ஹைட்ரஜன் வணிகத்தை மேம்படுத்த NGEL-HMEL இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • பசுமை ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் மாற்றத்திற்கான GOI இன் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக, NTPC கிரீன் எனர்ஜி லிமிடெட் (NGEL) மற்றும் மிட்டல் எனர்ஜி லிமிடெட் (HMEL) ஆகியவை இணைந்து மே19 அன்று புதுதில்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தம் HMEL இன் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 250 MW RE-RTC ஆற்றலைப் பெறுவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

“தேசிய தலைநகர் சிவில் பணி ஆணையத்தை” அமைக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
  • குரூப் ‘A’ மற்றும் DANICS அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பணியிடங்கள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதற்காக “தேசிய தலைநகர் சிவில் சர்வீசஸ் ஆணையத்தை” அமைப்பதற்கு மத்திய அரசானது அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளது.
  • இந்த ஆணையமானது “புது டெல்லியில்” அமைய உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

T-Hub – NRL ஆகிய நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • அரசாங்கத்தின் சுத்திகரிப்பு நிறுவனமான, நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் நிறுவனமானது(NRL) மே 17 அன்று, ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட முதன்மையான கண்டுபிடிப்பு மையம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பான T-Hub உடன் இணைந்து ஸ்டார்ட் அப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஸ்டார்ட் அப்பின் NRL ன் முதன்மை திட்டமான ‘iDEATION’ க்கான வணிக கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாக கொண்டுள்ளது.

துவாரகாவில் அமைய உள்ள “தேசிய கடலோர காவல்படை துறையின் வளாகத்திற்கு(NACP)” அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
  • குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் உள்ள ஓகாவில் “தேசிய கடலோர காவல் துறையின்” (NACP) நிரந்தர வளாகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.
  • ஐந்து யூனியன் பிரதேசங்கள், ஒன்பது கடலோர மாநிலங்கள் மற்றும் மத்திய காவல் படைகளின் கடல் காவல்துறையினருக்கு உயர்மட்ட தீவிர பயிற்சி அளிப்பதற்காக இந்த NACP அமைக்கப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ2000  பண மதிப்பிழப்பு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
  • “கிளீன் நோட்” கொள்கையின் கீழ் ரிசர்வ் வங்கியானது 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதற்கான ஆணையை வெளியிட்டுள்ளது.
  • மக்கள், தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதன்பிறகு வங்கிகள் 2000 ரூபாய் நோட்டுகளை ஏற்காது என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

காசியாபாத்-அலிகார் விரைவுச் சாலையில் 100 கிமீ சாலை 100 மணி நேரத்தில் கட்டப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
  • காசியாபாத்-அலிகார் 118 கிலோமீட்டர் நீளமுள்ள விரைவுச்சாலையானது 100 மணிநேரத்தில் 100  கி.மீக்கு “பிட்மினஸ் கான்கிரீட்டை” வெற்றிகரமாக அமைத்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
  • இந்த சாலையானது, ஒரு முக்கியமான வர்த்தகப் பாதையாகவும், சரக்குகளின் இயக்கத்தை எளிதாக்குவதன் மூலம் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இட்டு செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செய்திகள்

ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் சிலை திறப்பு.
  • ஜி7 மாநாட்டிற்காக பிரதமர் மோடி சமீபத்தில் ஹிரோஷிமாவிற்கு வந்ததையொட்டி, இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான “நட்புறவு மற்றும் நல்லெண்ணத்தின் அடையாளமாக” மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
  • மோடோயாசு நதியை ஒட்டி இந்த 42 அங்குல உயரமுள்ள வெண்கல மார்பளவு சிலையானது அமைந்துள்ளது. பத்ம பூஷன் விருது பெற்ற “ராம் வஞ்சி சுதாரால்” இது செதுக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பாகும்.

மாநில செய்திகள்

நாட்டின் முதல் நல்லாட்சி விதிமுறைகளுக்கு மகாராஷ்டிர அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது
  • மாநில நிர்வாகத்தை மிகவும் பொறுப்பானதாகவும், அணுகக்கூடியதாகவும், ஆற்றல்மிக்கதாகவும், வெளிப்படைத்தன்மையுடதாக மாற்றுவதற்கு, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மே 19 அன்று நாட்டின் முதல் நல்லாட்சி விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இதன் மூலம் ‘ஆப்லே சர்க்கார் சேவா கேந்திரா’வின் நோக்கத்தை விரிவுபடுத்த குடிமக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குடிமக்களின் குறைகள் விரைவான வேகத்தில் நிவர்த்தி செய்யப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார்.

பணியிடங்களை பெண்களுக்கு பாதுகாப்பானதாக மாற்ற தெலுங்கானாவானது ‘SAHAS’ திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி தனது மாநிலத்தில், பெண்களுக்கு பணியிடங்களை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கான முதல் முயற்சியாக SAHAS என்ற திட்டத்தினை மே 19 அன்று ஹைதரபாத்தில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த திட்டமானது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கான ஒரு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை ஏற்படுத்தி வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் “மூன்று நாள் 10வது சிந்தன் ஷிவிரை” குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கி வைத்துள்ளார்.
  • முதல்வர் பூபேந்திர படேல் மே 20 அன்று கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் குஜராத் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் மூன்று நாள் சிந்தன் ஷிவ்ரியை திறந்து வைத்தார்.
  • இந்த ஷிவிரின் போது, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நகரமயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வியில் தரமான முன்னேற்றம் மற்றும் திறன் மேம்பாடு போன்ற பல்வேறு தலைப்புகள் கூட்டாக விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‘சிந்தன் ஷிவிர்’ திட்டமென்பது, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் உரையாடுவதும், பிரதமர் மோடியின் “விஷன் 2047ஐ செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதும் ஆகும்.

புத்தக வெளியீடு

அன்ஷுமான் கெய்க்வாட்டின் சுயசரிதை புத்தகம் வெளியீடு.

  • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ஆறு பேர் கலந்து கொண்ட நிலையில், முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட்டின் அரை சுயசரிதை(Semi Autobiography) புத்தகமான ‘குட்ஸ் அமிட்ஸ்ட் பிளட் பாத்’ மே 19 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த புத்தகம் அவர் சிறு வயது முதல் கிரிக்கெட் உலகில் பெற்ற சாதனைகளை நினைவு கூறும் வகையில் அமைந்துள்ளது.

முக்கிய தினம்

உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம்
  • நமது உலகில்  பல்லுயிர் பெருக்கத்தை கொண்டாடும் வகையில் உயிரியல் பன்முகத்தன்மைக்கான சர்வதேச தினம் மே 22 அன்று  கொண்டாடப்படுகிறது. இந்த தினமானது பல்லுயிர் அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வையும்,பல்லுயிர்களைப் பாதுகாக்க பூமியின் வளங்களை நிலையான பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் பரிந்துரைக்கிறது
  •  2023 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “ஒப்பந்தத்திலிருந்து நடவடிக்கை வரை: பல்லுயிரியலை மீண்டும் உருவாக்குதல்”

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!