நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 19 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 19 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 19 மே 2023

தேசிய செய்திகள்

புதுதில்லியில் “தேசிய ஆயுஷ் மிஷன் மாநாடு 2023”-ஆனது மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  •  ஆயுஷ் அமைச்சகத்தின் முதன்மையான திட்டமாக உள்ள தேசிய ஆயுஷ் மிஷனின் (NAM) இரண்டு நாள் மாநாட்டை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 18 மே அன்று தொடங்கி வைத்துள்ளார்.
  • இந்த மாநாடானது “பங்குதாரர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்புக்கு வழி வகுக்கும் மற்றும் ஆயுஷ் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் செயல்பாட்டை வலுப்படுத்தும்” என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

DHR – WHO  இடையேயான  தொழில்நுட்பம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அரசு ஒப்புதல்.
  • இந்தியாவின் சுகாதார ஆராய்ச்சித் துறைக்கும் (DHR) உலக சுகாதார அமைப்புக்கும் (WHO) இடையிலான உதவித் தொழில்நுட்பம் தொடர்பான திட்ட ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல் மற்றும்  உதவி தொழில்நுட்பத்தை அணுகுவதில் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பது ஆகியவற்றை இந்த ஒப்பந்தமானது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் ORAN என்ற சோதனை படுக்கை திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • தீர்வுகளின் இணக்கம், சான்றிதழ் மற்றும் இயங்குநிலை மேம்பாட்டிற்காக, “திறந்த வானொலி அணுகல் நெட்வொர்க் (ORAN)” சோதனை படுக்கை திட்டத்தை(Test Bed), தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவ்சின் சவுகான் 17 மே அன்று புதுதில்லியில் தொடங்கி வைத்துள்ளார்.
  • இது ORAN உறுப்புகளின் சோதனையை எளிதாக்கவும் மற்றும் இந்தியாவில் முழு உள்நாட்டு 5G ரேடியோ நெட்வொர்க்கின் வளர்ச்சியை எளிதாக்கவும் இந்த சோதனையானது நோக்கமாக கொண்டுள்ளது.

ITதுறையின் வன்பொருளுக்கான ₹17,000 கோடி PLI திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை உள்நாட்டில் விரைவுபடுத்தும் வகையில், ITதுறையின் வன்பொருளுக்கான ₹17,000 கோடி PLI திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • மடிக்கணினிகள், தனிப்பட்ட கணினிகள் (PC), ஆல்-இன்-ஒன் கணினிகள், சர்வர்கள் மற்றும் மிகச்சிறிய வடிவ காரணி சாதனங்கள் போன்ற உயர்-தொழில்நுட்ப எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியை மேம்படுத்த இந்த திட்டமானது உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • PLI – Production Linked Incentive Scheme 

2024ல் இந்தியப் பொருளாதாரம் 6.7% வளர்ச்சியடையும் என ஐநா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
  • சமீபத்தில் ஐநாவால் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை 2023-ன்படி இந்தியாவின் பொருளாதாரமானது 5.8% லிருந்து, 2024 ஆம் ஆண்டில் 6.7% ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த வளர்ச்சியானது “வலுவான உள்நாட்டு தேவையால் அதிகரிக்கப்படும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

ஆப்கானிஸ்தானின் பிரதமராக “மவ்லவி அப்துல் கபீர்” பொறுப்பேற்பு.
  • ஆப்கானிஸ்தானில், தலிபான் அமைப்பானது “மவ்லவி அப்துல் கபீரை” தற்காலிக பிரதமராகவும், அமைச்சரவையின் இடைக்கால தலைவராகவும் நியமித்து அறிக்கை வெளியுட்டுள்ளது.
  • தலிபான் ஆட்சியின் தற்போதைய செயல் தலைவரான முல்லா முகமது ஹசன் அகுண்டின் உடல்நலக்குறைவு காரணமாக இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது என தலிபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு சொந்தமான “நிறுவனங்களின் சீர்திருத்த கொள்கைக்கு” இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • அரசாங்கத்தின் நிதியை வலுப்படுத்தவும் பொருளாதார மீட்சியை எளிதாக்கும் முயற்சியில் அரசுக்கு சொந்தமான நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் கொள்கைக்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தக் கொள்கையின் மூலம், மாறும்  விலைக்குக் குறைவான பொருட்களை விற்பதால் ஏற்படும் திவால் நிலையைத் தடுக்கவும், நாட்டின் வரவு செலவுத் திட்டத்தைச் ஏற்காத, சந்தை சார்ந்த நிறுவனங்களாக அரசு நிறுவனங்கள் மாற்றமடையும் எனவும் இலங்கை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 3 மாகாணத்திற்கு புதிய ஆளுநர்கள்  நியமனம்.
  • இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே 3 மாகாணங்களில் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார்.
  • பி.எஸ்.எம்.சார்லஸ் வட மாகாண ஆளுநராகவும்,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராகவும், இலங்கை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா வடமேற்கு மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில செய்திகள்

இந்தியாவின் 17வது வந்தே பாரத் ரயில் சேவையானது ஒடிஷாவில் தொடக்கம்.
  • இந்தியாவின் 17வது மற்றும் ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரயில்சேவையை பிரதமர் நரேந்திர மோடி மே 18 அன்று தொடங்கி வைத்துள்ளார். 
  • இந்த வந்தே பாரத் ரயிலானது ஹவுரா மற்றும் பூரி இடையேயான 500 கி.மீ தூரத்தை சுமார் ஆறரை மணி நேரத்தில் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தராமையா கர்நாடகாவின் முதல்வராக பொறுப்பேற்பு.
  • கர்நாடகாவில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலின் முடிவில் காங்கிரஸ் வெற்றி பெற்று புதிய முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் மே 20 அன்று பதவி பிரமாணம் எடுக்க உள்ளனர்.
  • இந்த இரு தலைவர்களும் “சுழற்சி முறைக்கு” ஒப்புக் கொண்டதன் மூலம் காங்கிரஸ் கட்சியானது இந்த முடிவை எடுத்துள்ளது. அதாவது சித்தராமையா 2.5 ஆண்டுகள் முதல்வராகவும், சிவக்குமார் 2.5 ஆண்டுகள் முதல்வராகவும் பதவி வகிப்பார்கள் என்றும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

குவகாத்தியில் ஏழு மதத் தலங்களை நீர்வழிகள் மூலம் இணைக்க திட்டம்
  • சாகர்மாலா திட்டத்தின் மூலம் குவகாத்தியில் அமைந்துள்ள காமாக்யா, பாண்டுநாத், அஷ்வக்லாந்தா, டூல் கோவிந்தா, உமானந்தா, சக்ரேஷ்வர் மற்றும் அவுனியாதி சத்ரா ஆகிய ஏழு வரலாற்றுக் கோயில்களை இணைக்கும் திட்டமானது கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் படகுச் சேவையை மேற்கொள்ளும் பயணிகள் ஒரு முழுமையான சுற்றுப் பயணத்தை முடிப்பதற்கு ஒட்டுமொத்த பயண நேரத்தை 2 மணி நேரத்திற்கும் குறைவாகக் குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

இந்தியருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது.
  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய மற்றும் மதிப்புமிக்க “செவாலியர் டி லா லெஜியன் டி’ஹானர்” (நைட் ஆஃப் தி லெஜியன் ஆஃப் ஹானர்) விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தி வளர்ப்பதில் கணிசமான பங்களிப்பை சந்திரசேகரன் மேற்கொண்டதால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

ஃபெடரேஷன் கோப்பை 2023 – பெண்களுக்கான 100 மீ தடைதாவல்(Hurdles) ஓட்டத்தில் “ஜோதி யர்ராஜி” தங்கம் வென்றுள்ளார்.
  • ஜார்கண்டின் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மைதானத்தில் நடைபெற்ற “ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில்” பெண்களுக்கான 100 மீ தடைதாவல்(Hurdles) ஓட்டத்தில் ஜோதி யர்ராஜி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஜோதி 12.89 வினாடிகளில் ஓடி முதலிடம் பெற்றுள்ளார் மற்றும் அவரை தொடர்ந்து நித்யா ராம்ராஜ் (13.44 வி) மற்றும் சப்னா குமாரி (13.58 வி), 100 மீ தடை ஓட்டத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெற்றுள்ளனர்.

இரங்கல் செய்திகள்

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அம்பாலா எம்பி ரத்தன் லால் கட்டாரியா காலமானார்.
  • ஹரியானாவின் அம்பாலா பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி எம்பி ரத்தன் லால் கட்டாரியா நீண்டகால உடல்நலக்குறைவு காரணமாக மே 18 அன்று காலமானார்.
  • இவர் மூன்று முறை எம்பியாகவும், ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் ஜூலை 7, 2021 வரை பணியாற்றியுள்ளார்.

முக்கிய தினம்

உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம்
  • ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று, உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அல்லது எச்ஐவி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் என்று கொண்டாடப்படுகிறது.
  • உலகெங்கிலும் தடுப்பூசியின் ஆராய்ச்சி செயல்முறையைத் தூண்டும் “கிளிண்டன் உரையின்” ஆண்டு நிறைவை இந்த நாள் நினைவுபடுத்துகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!