நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 16 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 16 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 16 மே 2023

தேசிய செய்திகள்
மக்கள் தங்கள் தொலைந்த மொபைல் போன்களைக் கண்காணிக்கவும் கண்டுபிடிக்கவும் உதவும் வகையில் புதிய வலைத்தலைத்தை மத்திய அரசாங்கம் தொடங்க உள்ளது
  • மக்கள் தங்கள் தொலைத்தொடர்பு மொபைல் போன்களைக் கண்காணிக்கவும் மற்றும் கண்டுபிடிக்கவும் உதவும் வகையில்  “சஞ்சார் சாதி போர்ட்டல்என்ற புதிய வலைதளத்தை  மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
  • மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி அவர்களால் இந்த வலைத்தளமானது அதிகாரப்பூர்வமாக மே 17 அன்று வெளியிடப்படும் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்களுக்கு “தனிப்பட்ட அடையாள எண் அட்டையை” மத்திய அரசு கட்டாயமாக்கியது.
  • தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) புதிய விதிமுறைகளின்படி, நமது நாட்டில் இனி மருத்துவம் செய்ய மருத்துவர்கள்தனித்துவ அடையாள எண்ணைப்” (யுஐடி) பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அடையாள எண் ஆனது NMC நெறிமுறைக் குழுவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பயிற்சியாளருக்கு, NMR இல் பதிவுசெய்தல் மற்றும் மருத்துவ பயிற்சி செய்வதற்கான தகுதிகளை எளிதில் வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ பூபேந்தர் யாதவ் “Meri LiFE” என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
  • சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக தனிநபர் மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளமிஷன் லைஃப்என்ற திட்டத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க இந்த “Meri LiFE” செயலி உதவும் என சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான மத்திய அமைச்சர் ஸ்ரீ பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
  • மிஷன் லைஃப்இன் குறிக்கோள்களான ஆற்றல் சேமித்தல், தண்ணீரைச் சேமித்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் குறைத்தல், நிலையான உணவு முறைகளை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் ஆகிய 5 கருப்பொருள்களின் கீழ் மிஷன் லைஃப் தொடர்பான பணிகளில் பயனர்களர்கள் இந்த செயலி மூலம் வழிகாட்டப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்குஇந்திய சார்பான குழுவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் எல்.முருகன் வழிநடத்துகிறார்.
  • மே 16 முதல் 27 வரை கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவானது நடைப்பெற உள்ள நிலையில், இதில் பங்கேற்கும் இந்தியக் குழுவை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் டாக்டர். எல். முருகன் வழிநடத்த உள்ளார்.
  • இந்தியாவின் ஆக்கப்பூர்வமான பொருளாதாரத்தை உலக சமூகத்திற்குக் காண்பித்தல்என்பது இந்த குழுவின் கருப்பொருளாக அமைகிறது. இந்த விழாவில் மீட்டெடுக்கப்பட்ட மணிப்பூரி திரைப்படமான ‘Ishanhou’ ‘பழமைபிரிவில் காட்சிப்படுத்தப்படும் என்பது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய அரசாங்கமானது பாதுகாப்பு துறையை மேம்படுத்துவதற்கானநான்காவது நேர்மறை உள்நாட்டுமயமாக்கல்பட்டியலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சகம் 928 பாதுகாப்பு உத்திகள் சம்பத்தப்பட்ட துணை அமைப்புகள் மற்றும் கூறுகளின் நான்காவது நேர்மறையான உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு துறையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதலானது பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 715 கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதிக்கு மாற்று மதிப்புடன் கூடிய இந்த பட்டியலின் விவரங்களை “SRIJAN” இணையதளத்தில் காணலாம்.

சர்வதேச செய்திகள்

இந்தியாஇந்தோனேசியா இடையிலான இருதரப்பு பயிற்சியானசமுத்திர சக்தி-2023′ 
  • இந்தியாஇந்தோனேசியா இடையிலான இருதரப்பு பயிற்சியானசமுத்திர சக்தி-2023′ ஆனது மே 14 அன்று இந்தோனேசியாவின் படாமில் தொடங்கியுள்ளது. சமுத்ர சக்தி என்பதுஇருநாட்டு கடற்படைகளுக்கும் இடையே இயங்கக்கூடிய மற்றும் பரஸ்பர ஒத்துழைப்பைமேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பயிற்சியாகும்.
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டநீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பலான INS கவரட்டி“, இந்தியாஇந்தோனேசியாவின் பயிற்சியான நான்காவது பதிப்பானசமுத்ர சக்தி-2023’ இல் பங்கேற்பதற்காக இந்தோனேசியாவின்படாமுக்குகடந்த சென்றுள்ளது.

Samudra Shakti exercise - JournalsOfIndia

பா தாவா எவரெஸ்ட்டில் அதிகமுறை ஏறி சாதனை
  • நேபாளத்தை சேர்ந்த “ஷெர்பா பசாங் தாவா” 26 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, எவரெஸ்ட்டில் அதிகமுறை ஏறிய கமி ரீட்டாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • பா தாவா இதற்கு முன்பு 2022 இல் இரண்டு மலையேற்றங்கள் உட்பட 25 முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறியுள்ளார். அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய உலகின் முதல் நபர் – “கமி ரீட்டா”.

நெதர்லாந்து நாடானது இந்தியாவின் 3வது மிகப்பெரிய ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்துள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்களுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்தானது இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி நாடாக உருவெடுத்துள்ளது என்று வர்த்தக அமைச்சகத்தின் தரவு காட்டுகிறது.
  • நெதர்லாந்துடனான இந்தியாவின் வர்த்தகமானது 2021-22ல் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 2022-23ல் 13 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது என்பது இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

மாநில செய்திகள்

ஒடிசா முதல்வர் 14 சிறப்பு மேம்பாட்டு கவுன்சில்கள் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  • ஒடிசாவில் உள்ள அனைத்து பழங்குடியின குழுக்களின் தனித்துவ அடையாளத்தையும், பழங்குடி கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் வண்ணம், 14 சிறப்பு மேம்பாட்டு கவுன்சில்கள் உருவாக்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
  • இதற்காக மாநில அரசு 23-24 நிதியாண்டில் 223 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில்ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகம்திறப்பு.
  • ஹைதராபாத்தில்ஒருங்கிணைந்த உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தைமத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மே 15 அன்று திறந்து வைத்துள்ளார்.
  • இந்த ஆய்வகம் உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உயிர் உரங்களின் பயன்பாடு, இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து மண் மற்றும் தாவரத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல் | Those Demanding Repeal Of Farm Laws Know Nothing About Them says ...

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
ஐஎன்எஸ் மோர்முகோவில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையானது துல்லியமாக இலக்கை தாக்கி சோதனையில் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மோர்முகவோவானது (ஏவுகணை அளிக்கும் போர்க்கப்பல்) பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து அதன் கடல்சார் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
  • இந்த ஏவுகணையானது 2.8 மேக் வேகத்தில் அல்லது ஒலியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு வேகத்தில் பறந்து சென்று இலக்கை தாக்கியுள்ளது என்று இந்திய கப்பற்படையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்

சிபிஐயின் புதிய இயக்குநராக பிரவீன் சூட் நியமனம்.
  • மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரியானபிரவீன் சூட்” 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கர்நாடக காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றிய பிரவீன் சூட், தற்போதைய சிபிஐ இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வாலுக்குப் பிறகு பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள்

தெலுங்கானாவை சேர்ந்த பிரணீத், இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டராகியுள்ளார்.
  • தெலுங்கானாவைச் சேர்ந்த V. பிரணீத், பாகு ஓபன் 2023 இன் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் GM ஹான்ஸ் நீமனை தோற்கடித்ததன் மூலம் இந்தியாவின் 82வது கிராண்ட்மாஸ்டர் ஆனார்.
  • இதன் மூலம் தெலுங்கானா மாநிலத்திலிருந்து ஆறாவது கிராண்ட்மாஸ்டர் இடத்தையும், இந்தியாவின்  82வது கிராண்ட்மாஸ்டர் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

முக்கிய தினம்
சர்வதேச குடும்ப தினம் 
  • குடும்பங்களின் மதிப்பு மற்றும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றிய முக்கிய பங்களிப்பை முன்னிலைப்படுத்தசர்வதேச குடும்ப தினமானதுஒவ்வொரு ஆண்டும் மே 15 அன்று கொண்டாடப்படுகிறது.
  • மக்கள்தொகை போக்குகள் மற்றும் குடும்பங்கள்என்பது 2023ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!