தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்களிடையே நீடிக்கும் காத்திருப்பு!

0
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு - அரசு ஊழியர்களிடையே நீடிக்கும் காத்திருப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு - அரசு ஊழியர்களிடையே நீடிக்கும் காத்திருப்பு!
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு – அரசு ஊழியர்களிடையே நீடிக்கும் காத்திருப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் எப்போது வெளியாகும் என்று தொடர்ந்து ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு:

தமிழகத்தில் மொத்தம் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பொதுவாக அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசின் ஊதியக் கொள்கையை பின்பற்றுகிறது. இதனால், மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும் தங்களது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவிக்கின்றனர்.

மத்திய அரசின் ஊழியர்கள் தற்போது 42% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். இது 2023 ஜனவரி 1 ம் தேதி முதலான 6 மாத காலத்திற்கான உயர்வாகும். இதனை தொடர்ந்து கோவா, ராஜஸ்தான், பீஹார், ஹரியானா, அசாம் மாநிலங்களிலும் ஊழியர்கள் 42% அகவிலைப்படியை பெற்று வருகின்றனர். அந்தவகையில், அதிக அளவிலான அரசு ஊழியர்களை கொண்ட தமிழகத்தில் அகவிலைப்படி எப்போது உயர்த்தி அறிவிக்கப்படும் என்று காத்திருக்கின்றனர். தமிழக அரசு இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!