நடப்பு நிகழ்வுகள் – 14 மே 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 14 மே 2023
நடப்பு நிகழ்வுகள் - 14 மே 2023

நடப்பு நிகழ்வுகள் – 14 மே 2023

தேசிய செய்திகள் 

தரவு ஆளுமைத் தரக் குறியீட்டு ஆய்வறிக்கையின் படி MoPSW அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 2வது இடத்தைப் பெற்றுள்ளது.
 • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகமானது(MoPSW) 2022-2023 Q3க்கான தரவு ஆளுமைத் தரக் குறியீட்டு (DGQI) மதிப்பீட்டில் அமைச்சகம் 5க்கு 4.7 மதிப்பெண்களைப் பெற்று 66 அமைச்சகங்களில் செல்வாக்குமிக்க இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.( இந்த மதிப்பாடானது NITI ஆயோக், மத்திய துறை திட்டங்கள் (CS) உட்பட மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டதாகும்.)
 • 66 அமைச்சகங்களில் இந்திய அரசின்உணவு ஆராய்ச்சி மற்றும் தொழில் அமைச்சகம்முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்பது இதில்  குறிப்பிடத்தக்கதாகும். இந்த மதிப்பீடானது தரவு உருவாக்கம், தரவுத் தரம், தொழில்நுட்பத்தின் பயன்பாடு, தரவு பகுப்பாய்வு, பயன்பாட்டை பரப்புதல், தரவு பாதுகாப்பு,மனிதவள திறன் மற்றும் வழக்கு ஆய்வுகள் என ஆறு முக்கிய கருப்பொருள்களை உள்ளடக்கியதாகும்.

புவனேஸ்வரில் இரண்டாவது கலாச்சார பணிக்குழு கூட்டமனது மே 14 அன்று தொடக்கம்.
 • இந்தியாவின் G20 பிரசிடென்சியின் கீழ் உள்ள கலாச்சார பணிக்குழுவானது(CWG) “பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களுக்கிடையில் அமைதியான சகவாழ்வினை மேம்படுத்தும்அடிப்படையில்கலாச்சாரம் அனைவரையும் ஒன்றிணைக்கிறதுஎன்பதை முன்னிலைப்படுத்தும் கூட்டத்தை நடத்துகிறது.
 • கலாச்சாரம், அதன் அனைத்து வெளிப்பாடுகளிலும், எல்லைகளைக் கடந்து, இணைப்புகளை வளர்ப்பதற்கும் மற்றும் தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளிடையே உண்மையான உரையாடல் மற்றும் புரிதலை ஊக்குவிக்கும் திறனை வளர்ப்பதை இந்த கூட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.

சர்வதேச செய்திகள் 

ஜாதி பாகுபாட்டை தடை செய்யும் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையை கலிஃபோர்னியா மாகாணம் பெற்றுள்ளது.
 • கலிஃபோர்னியா செனட்டானதுஜாதி பாகுபாட்டை தடை செய்வதற்கானமசோதாவை நிறைவேற்றியது. மேலும்  அத்தகைய சட்டத்தை இயற்றும் முதல் மாநிலம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.
 • மாநில செனட்டானது ஒரு மசோதாவை நிறைவேற்றி கலிபோர்னியாவின் சிவில் உரிமைகள் சட்டத்தை புதுப்பிக்கும் வகையில், ஒரு நபரின் சாதியின் அடிப்படையில் பாகுபாடு கட்டுப்படுத்துவதற்கு எதிரான பாதுகாப்பை இந்த சட்டமானது உள்ளடக்கியது.

மாநில செய்திகள் 

உத்தரகண்டின் டேராடூனில் தினை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்ததினை திருவிழாவானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 • உத்தரகாண்டில், தானியத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் இந்த வகையான பயிர்களை வளர்ப்பதற்கான மாநிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உத்திரகாண்டின் டேராடூனில் நான்கு நாள்தினை திருவிழாவானதுமே 13லிருந்து 16 வரை கொண்டாடப்படுகிறது.
 • 2025 ஆம் ஆண்டளவில் தினை உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கு அதிகளவிலான மக்களை ஈர்க்கும் வகையில் இந்த திருவிழாவானது அமையும் எனவும் மற்றும் விவசாயிகள் அதிக தினை வகையான தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்காக போக்குவரத்துத் துறையானது சிகாகோ பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MOU) கையெழுத்திட்டது.

 • டெல்லியில் வாகன மாசுபாட்டைக் குறைப்பதற்கானஆதாரத்தின் அடிப்படையிலான அணுகுமுறையைஎளிதாக்குவதற்காக, தில்லி அரசாங்கத்தின் போக்குவரத்துத் துறையானது, சிகாகோ பல்கலைக்கழக அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டது.
 • இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, அறிவு பரிமாற்றம் மற்றும் கொள்கை மதிப்பீட்டை எளிதாக்குவதற்கும், சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் பணியாற்றுவதற்கு டெல்லி அரசாங்க அதிகாரிகளுக்கு உதவும் என டெல்லி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ் 
 • கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 அன்று நடைபெற்றது. இதில் ஆளும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது.
 • காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமாக 136 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் பாரதிய ஜனதா கட்சி 64 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 20 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.

பஞ்சாப் மற்றும் மேகலாயாவின் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் 
 • பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையில், மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
 • மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள சோஹியோங் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில் ஐக்கிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சின்ஷார் குபர் ராய் தாபா 3,400 வாக்குகள் வித்தியாசத்தில் NPP வேட்பாளரை தோற்கடித்தார்.

நியமனங்கள்

ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோ நியமனம்.
 • ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க், முன்னாள் என்பிசி யுனிவர்சல் விளம்பர விற்பனைத் தலைவரானலிண்டா யாக்காரினோவைநிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளார்.
 • லிண்டா ட்விட்டரின் முதன்மையாக வணிக நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவார் என்றும், அவர் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி மேம்படுத்துதலுக்கு உதவுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா ராவ் குப்தா, அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் உலகளாவிய பெண்கள் பிரச்சனைகளுக்கான  தூதராக நியமனம்.
 • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா ராவ் குப்தா, அமெரிக்க வெளியுறவுத் துறையின் உலகளாவிய பெண்கள் பிரச்சனைகளுக்கான தூதராக அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார். கீதாராவ் குப்தா அமெரிக்க செனட்டில் 51க்கு 47 வாக்குகள் வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
 • அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காக முயற்சிகளை எதிர்நோக்குவதே எனது நோக்கம் என்று கீதாராவ் தெரிவித்துள்ளார்.


தொல்லியல் கண்டுபிடிப்பு

பெருவில்  4,000 ஆண்டுகள் பழமையான கோயில் கண்டுபிடிப்பு.
 • பெருவியன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் மேற்கு பெருவில் அமைந்துள்ள மிராஃப்ளோரஸ் என்னும் தொல்பொருள் தளத்தில் 4,000 ஆண்டுகள் பழமையான கோயிலைக் கண்டுபிடித்துள்ளனர்.
 • பெருவில் உள்ள சான்கே ஆற்றின் கீழ் பள்ளத்தாக்கில் இந்த கோவில் அமைந்துள்ளது என ஆராய்ச்சியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த கோவிலானது U வடிவில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

புதிய ஃபோட்டானிக் நினைவகமானதுநானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் அறிவியல் மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
 • பெங்களூரில் உள்ள நானோ மற்றும் சாஃப்ட் மேட்டர் அறிவியல் மையத்தின் (CeNS) ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில்டின் ஆக்சைடு சாய்ந்த நானோரோட் வரிசைகளைஅடிப்படையாகக் கொண்டு ஃபோட்டானிக் நினைவகத்தை உருவாக்கியுள்ளனர்.
 • ஒளியியல் மற்றும் மின் தூண்டுதல்களின் பண்புகளை மாற்றியமைக்க மற்றும் அதிக அடர்த்தி உயர் திறன் கொண்ட கணினி அமைப்புகளை உருவாக்குவதற்கு இந்த அமைப்பானது பயன்படுத்தப்படபாலாம் என அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார செய்திகள்

உரிமை கோரப்படாத பண டெபாசிட்டுகளைக் கண்டறிந்து தீர்வு காண்பதற்காக  ‘100 நாட்கள் 100 செலுத்துபிரச்சாரத்தை ரிசர்வ் வங்கியானது தொடங்கியுள்ளது.
 • இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிகளிலிருந்தும்கோரப்படாத டெபாசிட்களைமீட்டெடுக்கவும், அதனை திருப்பி கொடுக்கவும் ‘100 நாட்கள் 100 செலுத்துபிரச்சாரத்தை ஜூன் 1, 2023 இல் ரிசர்வ் வங்கியானது அறிவித்துள்ளது.
 • ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிமை கோரப்படாத முதல் 100 டெபாசிட்களை வங்கிகள் கண்டறிந்து, அத்தகைய வைப்புத்தொகையை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு திருப்பித் தருவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள்

ஹாலண்ட் இந்த ஆண்டின் “FWA சிறந்த கால்பந்து வீரருக்கானவிருதை பெற்றுள்ளார்
 • மான்செஸ்டர் சிட்டி குழுவின் ஸ்ட்ரைக்கர் வீரான எர்லிங் ஹாலண்ட் 2022-23 சீசனுக்கானகால்பந்து எழுத்தாளர் சங்கத்தின்சிறந்த கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மற்றும் ஆர்சனல் அணியின்புகாயோ சகாஹாலண்டிற்குப் பின் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
 • இதுவரை அவர் அனைத்து போட்டிகளிலும் 47 ஆட்டங்களில்  மொத்தம் 51 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு செய்திகள்

இந்திய கால்பந்து ஜாம்பவான் பிகே பானர்ஜியின் பிறந்தநாளை ‘AIFF கிராஸ்ரூட்ஸ் தினமாககொண்டாட AIF கழகம் அறிவித்துள்ளது
 • இந்திய கால்பந்து ஜாம்பவான் மற்றும் 1960 ரோம் ஒலிம்பிக்கில் கேப்டனுமான பிரதீப் குமார் பானர்ஜியின் பிறந்தநாளானஜூன் 23″-ம் தேதியைஅனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு (AIFF) கிராஸ்ரூட்ஸ் தினமாககொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
 • இந்த தினமானது இந்திய கால்பந்தாட்டத்தின் அடிமட்ட பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுவிஷன் 2047′ என்ற உத்தியை வீரர்களிடையே கொண்டு செல்வதாகும்.

முக்கிய நாள்

உலக  இடம்பெயர்ந்த பறவைகள் தினம்
 • புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக உலக இடம்பெயர்ந்த பறவைகள் தினமானது மே 2வது சனி மற்றும் அக்டோபர் 2வது சனிக்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது
 • நீர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு அதன் முக்கியத்துவம் மற்றும் நீரின் தரம், அளவு ஆகிய இரண்டிற்கும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை அகற்றுவது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!