நடப்பு நிகழ்வுகள் – 04 ஜூன் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 04 ஜூன் 2023
நடப்பு நிகழ்வுகள் - 04 ஜூன் 2023

நடப்பு நிகழ்வுகள் – 04 ஜூன் 2023

தேசிய செய்திகள்

2030க்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா அமையும் என சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • “2030 ஆம் ஆண்டுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின்(UAE) மிகப்பெரிய ஏற்றுமதி நாடாக இந்தியா இருக்கும்” என சர்வதேச நிறுவனமான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டின் தனது சமீபத்திய  ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 
  • “வணிகத்தின் எதிர்காலம்: உயர்-வளர்ச்சி தாழ்வாரங்களில் புதிய வாய்ப்புகள்” என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, “ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏற்றுமதி 2030 ஆம் ஆண்டளவில் 543 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும்” மற்றும் இந்த வளர்ச்சியானது வலுவான ஆண்டுக்கான வளர்ச்சி விகிதமான 5.5 சதவீதத்தை அதிகரிக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகமானது புதுதில்லியில் இரண்டு நாள் “சிந்தன் ஷிவிர்” நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
  • டெல்லியில் இரண்டு நாள் சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்பாடு செய்துள்ளார்.
  • இந்திய பொருளாதார வளர்ச்சியில் ரயில்வேயின் பங்கு, பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை இந்த நிகழ்ச்சியானது நோக்கமாக கொண்டுள்ளது.
    • சிந்தன் ஷிவிர் –  பிரதமர் மோடியின் தொலைநோக்கு கொள்கையை 2047ஐ செயல்படுத்துவதற்கான செயல் திட்டமாகும்.

14 நிலையான டோஸ் கலவை(FDC) “மருந்துகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செயலில் உள்ள மருந்துகளைக் கொண்ட 14 நிலையான டோஸ் கலவை(FDC) “மருந்துகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் வழங்கலை மத்திய அரசாங்கமானது தடை செய்துள்ளது.
  • நிபுணர் குழு ஆணையமானது இந்த மருந்துகள் எந்த சிகிச்சை அறமும் இல்லை என்றும், இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட மருந்துகளானது சளி, இருமல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்குப் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய கடற்படை மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் இடையே தொழில்நுட்ப கூட்டுறவை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • இந்திய கடற்படைக்கும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும் இடையே “தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்த” புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஜுன் 02,2023 அன்று புதுதில்லியில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 
  • பயிற்சி, மேம்பாடு, கூட்டு ஆராய்ச்சி, படிப்புகள், சிறப்பு மையம் (Marine Engine), INS சிவாஜி மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் குழுக்களின் “நேர்முக கள அளவிலான சிக்கல்களைத் தீர்ப்பது” போன்ற பல்வேறுப்பட்ட ஒத்துழைப்பை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • முன்னாள் ராணுவத்தினருக்கு மற்றும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க மற்றும் அவர்களை பொதுவான தளத்தில் கொண்டு வரும் முயற்சியை மேற்கொள்ள முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை மற்றும் மீள்குடியேற்ற இயக்குனரகம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • திறமையான மனிதவளத்திற்கும் உள்நாட்டில் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையிலான ஒரு இடைவெளியைக் இந்த ஒப்பந்தமானது குறைத்து நாட்டின் முன்னேற்றத்திற்க்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்வையும் மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

பொருளாதார உறவுகளை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் தைவான் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையில் அதிக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன
  • சமீபத்திய ஆண்டுகளில் சீனாவிற்கும் தைவானுக்கும் இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்த ஒப்பந்தமானது சீனாவுக்கு பாதகமாகவும், அமெரிக்கா மற்றும் தைவானுக்கு சாதகமாகவும் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 2025 இல் “இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) உலக பாதுகாப்பு கூட்டத்தை” நடத்த திட்டமிட்டுள்ளது.
  • 2025ஆம் ஆண்டில் “இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உலக பாதுகாப்பு கூட்டத்தை” நடத்துவதற்கான முன்னெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் வெற்றி பெற்றுள்ளது.
  • இந்த நடவடிக்கையின் மூலம் “சுற்றுச்சூழலுக்கான பாதுகாப்பு, காலநிலை மாற்ற நடவடிக்கை மற்றும் நிலைத்தன்மை” ஆகியவற்றில் ஐக்கிய அரபு அமீரகமானது அதன் தலைமையின் உறுதிப்பாட்டை மேலும் உலகிற்கு உறுதிப்படுத்தியுள்ளது.

மாநில செய்திகள்

கர்நாடகா அமைச்சரவையானது 5 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த 5 திட்டங்களான  “க்ருஹ ஜோதி, க்ருஹ லட்சுமி, அன்ன பாக்யா, சக்தி, யுவநிதி” ஆகியவைகளுக்கு தற்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையானது ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த திட்டங்கள் அனைத்தும் இந்த நிதியாண்டில்(2023-2024) வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ₹13,000 கோடியில் லித்தியம் அயன் மின்கலத் தொழிற்சாலை அமைக்க திட்டம்.
  • “அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ்” என்ற டாடா குழுமத்தின் துணை நிறுவனமானது குஜராத் அரசுடன் இணைந்து, மாநிலத்தில் லித்தியம்-அயன் மின்கலம் உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை(MoU) மேற்கொண்டது. 
  • இந்த திட்டத்தின் மூலம் நிறுவனம் முதலில் ₹13,000 கோடி முதலீடு செய்யும் என்றும், 20 GWh இன் ஆரம்ப உற்பத்தி திறன் கொண்ட இந்த ஆலையானது 13,000 பேருக்கு மேல் நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்புக்கான (BICI) “ப்ளூம்பெர்க்” பெருந்தன்மை முயற்சியின் வெற்றியாளராக “பிம்ப்ரி-சின்ச்வாட்” நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜூன் 3 அன்று உலக மிதிவண்டி தினத்தை கொண்டாடும் வகையில், ப்ளூம்பெர்க் பரோபகாரர்கள் சைக்கிள் ஓட்டுதல் உள்கட்டமைப்புக்கான ப்ளூம்பெர்க் முன்முயற்சியின் (BICI) தொடக்க வெற்றியாளர்களை அறிவித்தனர்.
  • இந்த அறிவிப்பானது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 275 பயன்பாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நகரங்களில் இந்த “பிம்ப்ரி-சின்ச்வாட்” நகரமும் ஒன்றாகும். மேலும் பாதுகாப்பான மற்றும் “திறமையான சைக்கிள் ஓட்டுதல்” உள்கட்டமைப்பை உருவாக்கும் புதுமையான பார்வைக்காக இந்த நகரமானது அங்கீகரிக்கப்பட்டுள்ளது என ப்ளூம்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதராவில் 48 கோடி அளவிலான இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடக்கம்.
  • குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் ரூ. 48 கோடி மதிப்பிலான “இரண்டு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை” மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களால் ஜுன் 2 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டங்கள் 3-வழி பாதை, கட்டுமானத்தில் ஒரு புதிய பாதுகாப்பான போக்குவரத்து நிலைமையை உறுதி செய்யும் மற்றும்  தொழில்துறை பகுதிகளில் இருந்து மேம்படுத்தப்பட்ட அணுகல் மென்மையான இயக்கத்தை எளிதாக்கும் என கட்கரி தெரிவித்துள்ளார்.

நியமனங்கள்

இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் புதிய தலைமை இயக்குநராக ஜனார்தன் நியமனம்.
  • இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) புதிய தலைமை இயக்குநராக ஜனார்தன் பிரசாத் ஜூன் 2ஆம் தேதி நியமிக்கபட்டுள்ளார்.
  • இதற்கு முன், அவர் ஜூன் 2020 முதல் தென் பிராந்தியத்தின் “கூடுதல் இயக்குநராகவும், துறைத் தலைவராகவும் (ADG & HoD) இருந்துள்ளார் மற்றும் தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் தொழில்நுட்ப மற்றும் செலவுக் குழுவின் (TCC) தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

விளையாட்டு செய்திகள்

ஜூடோ சாம்பியன்ஷிப் 2023 போட்டியில்  தசீம் ஃபயாஸ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
  • ஸ்ரீநகரைச் சேர்ந்த இளம் ஜூடோ வீரரான தசீம் ஃபயாஸ், அனைத்திந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான “ஜூடோ சாம்பியன்ஷிப் 2023” போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுளார். 
  • இந்த போட்டியில் “காஷ்மீர் பள்ளத்தாக்கைப்” பிரதிநிதித்துவப்படுத்தும் தசீம் தனது அபரிவிதமான முழு திறமையையும் உறுதியையும் வெளிப்படுத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் அவர் தோல்வியடைந்தாலும், அவரது சிறப்பான ஆட்டமானது அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது என ஜம்மு & காஷ்மீர் ஜூடோ விளையாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

பொருளாதார செய்திகள்

2023ல் மலேசியப் பொருளாதாரமானது 4.5% வளர்ச்சி அடையும் – IMF ஆய்வறிக்கை.
  • 2023ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரமானது 4.5% வளர்ச்சி அடையும் என சர்வதேச நாணய நிதியமானது(IMF) தனது சமீபத்திய ஆய்வறிக்கையில் அறிவித்துள்ளது.
  • “ஏப்ரல் 2022 இல் மலேசியப் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் வளர்ச்சி 2022 இல் 8.7% ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது, இது உள்நாட்டு தேவை மற்றும் வலுவான ஏற்றுமதி கட்டமைப்பின் செயல்திறன் ஆகியவற்றால் உந்தப்பட்டது. மேலும் “2023 ஆம் ஆண்டில் மலேசியாவின் பணவீக்கமானது 3.3% ஆக உயரும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய தினம்

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம்.
  • உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் உடல் அளவாலும் மன அளவாலும் பாதிக்கப்படும் வலியை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 
  • குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஐ.நா.வின் முக்கியமான உறுதிப்பாட்டை இந்த நாளானது உறுதிப்படுத்துகிறது மற்றும் உலகளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை இது பெரியளவு தடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Download PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!