CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு (1)
CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு (1)

CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையத்தில் (CRIS) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Software Engineer (ASE) மற்றும் Assistant Data Analyst (ADA) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Centre for Railway Information Systems (CRIS)
பணியின் பெயர் ASE, ADA
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
CRIS காலிப்பணியிடங்கள்:

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Assistant Software Engineer (ASE) பணிக்கு 144 பணியிடம் என்றும், Assistant Data Analyst (ADA) பணிக்கு 06 பணியிடம் என்றும் மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

TN Job “FB  Group” Join Now

Railway கல்வி தகுதி:
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பொறியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Software Engineer (ASE) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Computer Science and Information Technology பிரிவில் GATE 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Data Analyst (ADA) பணிக்கு விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Statistics பிரிவில் GATE 2022 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
CRIS ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மத்திய அரசின் 7ம் ஊதிய அளவின்படி, Level – 7 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.

Railway தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் GATE 2022 ம் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CRIS விண்ணப்பிக்கும் முறை:

ரயில்வே துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று 25.04.2022 ம் தேதி முதல் 24.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Download Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!