இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – சீரம் நிறுவனர் விளக்கம்!!
தடுப்பூசி பற்றாக்குறை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தடுப்புப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி ஊரடங்குகளை அமல்படுத்தியுள்ளனர். மேலும் கடைகள், அலுவலகங்களில் வேலை நேரங்களை குறைத்தும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும் மக்களுக்கு அரசு வலியுறுத்தி வருகிறது.
தற்போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 வயதுக்கு மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. மேலும் இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 இலட்சத்தை தாண்டி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. மாநில அரசுகள் சொல்லிய தேதியில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தாமதமாகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் ராஜினாமா கடிதம் – ஆளுநரிடம் சமர்ப்பிப்பு!!
இது குறித்து தமிழகம் உட்பட பல மாநிலங்கள் போதுமான தடுப்பூசிகள் இன்னும் வந்தடையவில்லை என கூறினார். இந்தியாவில் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும் என சீரம் இன்ஸ்டியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்