தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தீவிரம் – மத்திய சுகாதாரத்துறை தகவல்!!
நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது நாட்டில் தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் தான் நாடு முழுவதும் கொரோனா பதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று:
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமான அளவில் இந்தியாவில் கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதல் நாட்டில் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றபட்டு வருகிறது. இருந்தும் நாட்டில் முழுமையான அளவில் கொரோனா நோய்த்தொற்று குணமாகவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமடைந்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இதனால் நாட்டில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மேலும் பல மாநிலங்களில் அந்த மாநிலத்தின் நிலைக்கேற்ப பல தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகின்றனர். தற்போது நாட்டில் 10 மாநிலங்களில் மிக அதிகமான அளவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதனை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது.
தமிழக மின்சாரா வாரிய உதவி பொறியாளர் தேர்வு ஒத்திவைப்பு – தேர்வர்கள் அதிர்ச்சி !
அதன்படி சுகாதாரத்துறை தெரிவித்ததாவது, இந்தியாவில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தரபிரதேச உட்பட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் மொத்த பதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1.32 லட்ச பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 83.29 சதவிகித பாதிப்பு இந்த 10 மாநிலங்களில் என்பது குறிப்பிடத்தக்கது.