வார இறுதி முழு ஊரடங்கு நீக்கம், இரவு ஊரடங்கில் தளர்வு – நாளை முதல் அமல்!
ஒடிசா மாநிலத்தில் தற்போது வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த வார இறுதி முழு முடக்கம் நீக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கிலும் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீக்கம்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாடு முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக ஒடிசாவில் மே மாதம் துவங்கி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளில் இருந்து அரசு சில தளர்வுகளை அளித்திருந்த போதிலும் வார இறுதி முடக்கம் மற்றும் இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதற்கு மத்தியில் வீழ்ச்சியடைந்து வரும் கொரோனா தொற்று நோய்களுக்கு மத்தியில் மேலும் சில கூடுதல் தளர்வுகளை வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் வார இறுதி பணி நிறுத்தம் நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு – இன்று முதல் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு!
தொடர்ந்து நாளை (செப்டம்பர் 2) முதல் திருமண ஊர்வலங்கள் மற்றும் சமூக விழாக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர இரவு ஊரடங்கு உத்தரவு நேரமும் மூன்று மணி நேரத்திற்கு தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு நிவாரண ஆணையர் பிரதீப் குமார் ஜெனா வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் கீழ், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் வார இறுதி பணி நிறுத்தம் இருக்காது என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நகர்ப்புறங்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே அமலில் இருக்கும்.
TN Job “FB
Group” Join Now
திருமண விழாக்களில் அதிகபட்சமாக 250 பேர் வரை கலந்து கொள்ளவும், திருமண நிகழ்வுகளில் ஒலி அமைப்புகள் தவிர, இசைக்குழு, பஜா மற்றும் பராத் ஆகியவற்றிற்கும் அரசாங்கம் அனுமதித்துள்ளது. அனைத்து வகையான கடைகள், மால்கள் இனி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 100% திறனுடன் திறக்கப்பட்டிருக்கும். பொது நூலகங்கள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமூக, அரசியல் மற்றும் மத கூட்டங்களுக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.