அபுதாபியில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 முதல் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அபுதாபி அரசு அறிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இத்தகைய உருமாறிய வைரஸ் அதிக வீரியத்துடன் பரவி உலகம் முழுவதும் பாதிப்புகளை அதிகப்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாட்டு அரசுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி அனைத்து நாடுகளிலும் ஊரடங்குகள், கடும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பேருந்துகளில் CCTV கேமரா பொருத்தும் பணிகள் -அமைச்சர் அறிவிப்பு!
அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசுகள் மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது. முன்பை விட தற்போது மக்கள் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை பெற்று தடுப்பூசி செலுத்த தானாக முன் வருகின்றனர். இதனால் சற்று கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனாலும் அனைத்து நாட்டு அரசுகளும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. அடுத்த பேரிடராக டெல்டா வைரஸ் தீவிரமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் முன்னெச்சரிக்கை பணியாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துபாய் கடந்த வருடம் சுற்றுலாவிற்கு அனுமதி அளித்த பிறகு, அபுதாபி கொரோனா தாக்கத்தை சந்தித்தது. மேலும் அபுதாபியில் நாள் ஒன்றுக்கு தொற்று பாதிப்பு 1,500 ஆக இருந்து வருகிறது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்த வருடம் பக்ரீத் பண்டிகை விரைவில் கொண்டாடப்படவிருக்கும் நிலையில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜூலை 19 முதல் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அபுதாபி அரசு அறிவித்துள்ளது.