கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த ஆசிரியர்கள் – 10 லட்சம் குடும்பங்கள் தவிப்பு!!
நாடு முழுவதும் பெருகி வந்த கொரோனா நோய்த்தொற்றால் பலர் தங்களது அன்றாட வாழ்வாதாரத்தை இழந்தனர். கடந்த ஒரு வருடமாக மக்கள் எதிர் கொண்டு வரும் சூழலை சமாளிக்க நிவாரணங்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் இழப்பு:
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவி வந்த நோய்த்தொற்று காரணமாக பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், தனியார் அலுவலங்களில் பணிபுரிபவர்கள் என பலர் நெருக்கடியை சந்தித்து வந்தனர். கொரோனா காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரங்களை இழக்க நேரிட்டது. இதனால் பல குடும்பங்களில் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் காணப்பட்டது. அதன்படி நோய்த்தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டு முழுவதும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், தனியார் கல்லூரி ஆசிரியர்கள் என அனைவருக்கும் வழக்கமாக தரப்பட்டு வந்த சம்பளத்தில் பாதி வழங்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
இதனடிப்படையில் 10 லட்ச ஆசிரிய குடும்பங்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கூட முடியாமல் திணறியது. பொதுவாக தனியார் பள்ளிகளில் ஆசிரியர் பணி செய்பவர்களுக்கு சொற்ப அளவு சம்பளம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதில் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் பாதியளவு சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டதால் பல குடும்பங்களில் வறுமை உருவாகியது. இதுதவிர சம்பளம் கொடுக்க முடியாமல் திணறிய பல கல்வி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்தது.
ரேஷன் கார்டில் புதிய நபர் இணைப்பு – ஆன்லைனில் செய்வது எப்படி?
அந்த ஆசிரியர் குடும்பங்களின் நிலைமை இன்னும் மோசமாக மாறியது குறிப்பிடத்தக்கது. இவற்றை கருத்தில் கொண்டு தெலுங்கானா மாநில அரசு 2000 ரூபாயும், 25 கிலோ அரிசியும் நிவாரணமாக வழங்கியது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டுமாக பழைய சூழல் உருமாகிவிடுமோ என்ற அச்சத்தில் பலர் காணப்படுகின்றனர். இந்நிலையில் முறையான சம்பளம் இல்லாமல் காணப்படும் ஆசிரியர்களுக்கு அரசு வேறு ஏதும் நிவாரணங்களை வழங்கலாம் என பல தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.