விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "குக் வித் கோமாளி" ஷிவாங்கிக்கு ஏற்பட்ட சோகம் - ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “குக் வித் கோமாளி” ஷிவாங்கிக்கு ஏற்பட்ட சோகம் – ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் ஷிவாங்கி. அவருடைய பாடல் ஒன்று தற்போது ஹிட்டாகி உள்ள நிலையில் சோகமான பதிவு ஒன்றை அவர் தற்போது ஷேர் செய்துள்ளார்.

ஷிவாங்கியின் பதிவு:

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி ஆகும். மக்களால் அதிகம் வரவேற்பை இந்த ஷோ பெற்றதால் அடுத்தடுத்து இரண்டு சீசன்கள் தொடங்கப்பட்டன. இரண்டாவது சீசன் தற்போது தற்போது முடிவடைந்த நிலையில், மூன்றாவது சீசனுக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து பிரபலமாகி உள்ளனர்.

‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா திருமணத்திற்கு பிறகு ஜோடியாக வெளியிட்ட புகைப்படம் – குவியும் லைக்குகள்!

அதில் ஒருவர் தான் பாடகி ஷிவாங்கி. அவரது அம்மாவும் ஒரு கர்நாடகா பாடகர் தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக அறிமுகமான ஷிவாங்கி பாடலை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரது நகைச்சுவை குணத்தால் தான் புகழடைந்தார். மேலும் புகழ், ஷிவாங்கி, அண்ணன், தங்கை பாசத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது. அதையே காரணமாக வைத்து இருவரும் செய்யும் லூட்டியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இசைவாணி தனது திருமணத்தை மறைத்தது ஏன்? அவரே வெளியிட்ட வீடியோ!

சுட்டித்தனமாக எப்போதும் இருக்கும் ஷிவாங்கி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் சோகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் சந்தர்ப்பவாதிகள் கிட்ட இருந்து சற்று விலகியே இருங்க ஏன் என்றால் அவர்கள் உங்களை யூஸ் பண்ண மாட்டேன் என சொல்லி பயன்படுத்துவார்கள் என பதிவிட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணை யாரு இப்படி வருத்தப்பட வைத்திருப்பார் என தெரியவில்லை. ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார். மேலும் என்ன சொல்ல போகிறாய் என அஸ்வின் நடித்த படத்தில் ஒரு பாடல் ஒன்றை பாடி இருக்கிறார். அதை கொண்டாடாமல் அவர் சோகமாக பதிவிட்டதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!