‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் இசைவாணி தனது திருமணத்தை மறைத்தது ஏன்? அவரே வெளியிட்ட வீடியோ!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், ஏழாவது வாரம் வெளியேறிய இசைவாணி தனது திருமணம் குறித்து ஏன் சொல்லவில்லை என பதில் அளித்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மாதம் தொடங்கப்பட்டு தற்போது 55 நாட்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியின் முதல் நாளில் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் வெளியேறி இருக்கின்றனர். மேலும் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக 3 பேர் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளை பெற்று ஜக்கி பெர்ரி வெளியேறினார். அதற்கு முன்னதாக இசைவாணி வெளியேற்றப்பட்டார்.
‘ராஜா ராணி’ ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட ‘பாரதி கண்ணம்மா’ துர்கா – ரசிகர்கள் வாழ்த்து!
அவர் வெளியேறியது முதல் பல தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து வருகிறார். அப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் பற்றி நிறைய விஷயங்கள் மனம் திறந்து பேசி இருக்கிறார். அவர் பிக்பாஸ் வீட்டில் முதல் நாளில் அனைவருடனும் நான் பேசிய நிலையில் அதன் பின் அனைவரும் நண்பர்களாக சேர்ந்து விட்டனர். அதனால் என்னை ஒதுக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன் என சொல்கிறார். மேலும் சொந்த வாழ்க்கை பயணம் பற்றி கதை சொல்லும் போது திருமணத்தை மறைக்க என்ன காரணம் என பலர் கேள்வி எழுப்பினார்கள்.
நடிகை சமந்தா செய்த புதிய சாதனை – இன்ஸ்டாகிராமில் 2 கோடி ஃபாலோயர்கள்! குவியும் வாழ்த்துக்கள்!
அதாவது இசைவாணிக்கு கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவருக்கும் திருமணம் ஆகி பின்னர் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். ஆனால் சோக கதை சொல்லும் போது இப்போது வரை சொந்த வீடு இல்லை, உடுத்தி கொள்ள சரியான துணி இல்லை, அப்பாவுக்கு பாட யாரும் வாய்ப்பு தரவில்லை என சொன்ன அவர் திருமண வாழ்க்கை பற்றி எதுவும் சொல்லவில்லை. அதனால் பல தரப்பில் இருந்து கேள்விகள் வந்தது. இது குறித்து இசைவாணி கூறுகையில் தன்னுடைய திருமணத்தை மறைக்க வேண்டும் என்பதற்காக நான் அதை வெளிப்படுத்தாமல் இல்லை. அது எனக்கு தேவையில்லை. அதை பற்றி நினைக்க வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டேன் என விளக்கம் அளித்து இருக்கிறார்.