IND vs BAN 2024: கான்பூரில் வெளுத்து வாங்கும் மழை.. சிக்கலில் இந்திய அணி!!
வங்கதேச ஆடவர் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதல் நாள் ஆட்டத்தின் போது மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக துவங்கியது. அதன் பிறகும் மழை குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.
தமிழகத்தின் 19 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் .., வானிலை மையம் தகவல்!!!
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 28) இரண்டாவது நாள் ஆட்டமும் மழை காரணமாக தொடங்கவில்லை. தற்போது கான்பூரில் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் இந்த ஆட்டத்தின் 2வது நாள் ஆட்டம் நடக்குமா? என கேள்வி உண்டாகியுள்ளது. ஆட்டம் தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததால் இந்திய அணி மைதானத்தில் இருந்து ஹோட்டலுக்கு திரும்பியது.


























