தமிழகத்தில் 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்வு…!! ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தகவல்
தமிழக சுங்க சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சுங்க கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 40 சுங்க சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சுங்க கட்டணம் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், முதற்கட்டமாக வானகரம். செங்கல்பட்டு, பரனூர், திண்டிவனம், ஆத்தூர், சூரப்பட்டு மற்றும் பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து சுங்கக்கட்டணம் உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின், மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுங்க சாவடிகளில் வாகனகங்களுக்கு ஏற்ப ரூ. 5 லிருந்து ரூ. 25 வரை சுங்கக்கட்டணங்களை உயர்த்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
























