
அடிக்கடி ATM பயன்படுத்துபவரா நீங்கள்..?? RBI விதித்த புதிய விதி மாற்றம்.. இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க.
ATM என்பது ஒரு மின்னணு வங்கிச் சாதனமாகும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை அணுகவும், வங்கித் தகவல் வழங்குபவரின் தலையீடு இல்லாமல் தங்கள் நிதி பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளவும் முடியும். இந்த ATM கள் வங்கிகள், ஷாப்பிங் மால்கள், விமான நிலையங்கள் உட்பட பல்வேறு பொது இடங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி ATM பரிவர்த்தனைகள் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆசிரியர் தேர்வுகளுக்கான ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு…!! 7,535 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்
அதாவது, “ATM சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.2 கூடுதல் கட்டணம் மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.1 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என RBI தெரிவித்துள்ளது. இந்த புதிய விதியானது மே 1 முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய விதிமுறையின் படி நிதி பரிவர்த்தனைகள் அதாவது பணம் எடுப்பது போன்றவைக்கு பரிமாற்றக் கட்டணம் ரூ.17-ல் இருந்து ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், நிதி அல்லாத பரிவர்த்தனைகள் அதாவது இருப்பு விசாரணை அல்லது பிற சேவைகளுக்கு பரிமாற்றக் கட்டணம் ரூ.6-ல் இருந்து ரூ.7 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் சிறிய வங்கிகள் அதிக இழப்பை சந்திக்ககூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்”.























