
UPI வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…ஏப்ரல் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…முழு விவரம் இதோ
இன்றைய காலகட்டத்தில் மக்கள் வங்கிகளுக்கு சென்று பண பரிமாற்றம் செய்வது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு, காரணம் தற்போது UPI போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவது தான். மேலும், தற்போது இந்தியாவில் சுமார் 42.4 கோடி மக்கள் UPI சேவைகளை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து UPI சேவைகளில் புதிய கட்டுப்பாடுகளை செயல்படுத்த உள்ளதாக தேசிய பணபரிமாற்ற கழகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, 3 மாதங்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத செல்போன் எண்களில் உள்ள UPI கணக்குகளை நிரந்தரமாக மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பயன்பாட்டில் இல்லை என்றால், அந்த வங்கி கணக்கு தற்காலிகமாக மூடப்படும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், நாட்டில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை தடுப்பதற்காகவே இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே, இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க, உங்களுடைய செல்போன் நம்பர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை ஒரு முறை சரிபார்த்து கொள்வது அவசியமாகும்.

























